புதன், 13 ஜூன், 2018

அன்றே சொன்னேன்! அப்படியே நடந்தது!
நாஷ் சமநிலை பாதிக்காது என்று அடித்துக்
கூறினேன்! அப்படியே நடந்தது!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
வடகொரியா அமெரிக்கா இருநாடுகளும்
ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப்  மற்றும் வடகொரிய
அதிபர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும்
ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.

வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை
அழித்து விடுவதாக ஒப்புக் கொண்டுள்ளது.
 
முன்னதாக செப்டம்பர் 2017ல் வடகொரியா
அணுவெடிப்புச் சோதனையை நடத்தியது.
அமெரிக்கா மீது வீசுவேன் என்றார் கிம் ஜாங் உன்.
உலகம் முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
மூன்றாம் உலகப் போர் வரும் என்று குட்டி
முதலாளித்துவ அரைவேக்காடுகள் கதறிக்
கொண்டிருந்தனர்.

மொத்தத் சூழலும் மின்னேற்றம் பெற்றது போல்
ஆனது (The entire atmosphere was charged with emotion). சர்வதேச
அரசியல் விமர்சகர்கள் என்போர் அணுஆயுதப்
போர் உறுதி என்று வறட்டு ஆருடம் கூறிக்
கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நியூட்டன் அறிவியல் மன்றம்
அறிவியல் ஒளி இதழில் ஒரு கட்டுரை எழுதியது.
அறிவியல் ஒளி அக்டோபர் 2017 இதழில் அக்கட்டுரை
வெளிவந்தது. கட்டுரையின் பெயர்:
வடகொரியா குண்டு வெடிப்பினால் சமநிலை
பாதிக்குமா?

இக்கட்டுரையில் MAD கோட்பாடு
(MAD= Mutually Assured Destruction)
நாஷ் சமநிலை (Nash equilibrium) உள்ளிட்ட சமகால
நவீன ராணுவப் போர்த்தந்திரத்தின் (military strategy)
கூறுகள் விளக்கப்பட்டு இருந்தன.

"வடகொரியா அணுகுண்டைப் பிரயோகிக்காது;
ஏனெனில் நாஷ் சமநிலை பாதிப்படைவதை
வடகொரியா விரும்பாது" என்று அக்கட்டுரையில்
தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தோம்.

பலரும் அன்று நாம் சொன்னதை ஏற்கவில்லை.
ஏற்காமல் இருந்ததன் காரணம் அறியாமையே.
இன்று என்ன நடந்துள்ளது? அன்று நாம் என்ன
சொன்னோமோ, அது அப்படியே நடந்துள்ளது.

அறிவியல் ஒளி கட்டுரை இறுதியில் இப்படி
முடிந்தது:
"மொத்தத்தில் ஹைட்ரஜன் குண்டு வெடிப்புச்
சோதனை நடத்திய பின்னரும் கூட, வடகொரியா
எவர் மீதும் அதைப் பிரயோகிக்காது. ஏனெனில்
நாஷ் சமநிலையில் இருந்து விலக வடகொரியா
விரும்பாது".

இங்கு "எவர் மீதும்" என்பது தென்கொரியா,
அமெரிக்கா  ஆகிய இரண்டு நாடுகளின் மீதும்
என்று பொருள்.

இந்தக் கட்டுரையில் என்ன சொன்னோமோ
அதுதானே இன்று நடந்துள்ளது. எவராவது
இதை மறுக்க இயலுமா?

நாஷ் சமநிலை என்றால் என்ன என்று தெரிந்து
கொள்ள வேண்டியது அவசியம். இதைத் தெரிந்து
கொள்ளாமல் யார் எவரானாலும் அணுஆயுதம்
பற்றியோ வடகொரிய-அமெரிக்க ஒப்பந்தம்
பற்றியோ புரிந்து கொள்ள இயலாது.

நாஷ் என்பவர் மறைந்த கணித மேதை. நோபல்
பரிசு மற்றும் ஏபெல் பரிசு இரண்டையும்
பெற்றவர். நாஷ் சமநிலை பற்றி அறிய
அறிவியல் ஒளி ஏட்டில் நியூட்டன் அறிவியல் மன்றம்
எழுதிய கட்டுரையைப் படியுங்கள்.
****************************************************** 
         

Game Theory பற்றி அறிந்திட DARK KNIGHT படத்தின்
இந்த கிளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கவும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக