சனி, 16 ஜூன், 2018

பிறை ஏன் தெரிவதில்லை?
இதற்குத் தீர்வு என்ன?
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
1) சந்திரன் ஒரு நகரும் பொருள். அது வினாடிக்கு
1 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.
அதாவது ஒரு நிமிடத்தில் சந்திரன் 60 கிலோமீட்டர்
தூரம் நகர்ந்து விடும்.

2) ஒரு ஊரில் ஒருவர் பிறையைப் பார்க்கிறார்.
தான் பார்த்ததற்கு சாட்சிகள் வேண்டும் என்பதால்
சாட்சிகளை அழைத்து வரப் போகிறார். சாட்சிகளுடன்
அவர் வந்து சேர 15 நிமிடம் நேரம் ஆகிறது. ஆனால் முன்பு
பார்த்த இடத்தில் இப்போது பிறை தெரியவில்லை.

3) என்ன காரணம்? இந்த 15 நிமிடத்தில் சந்திரன்
 900 கிலோமீட்டர் தூரம் நகர்ந்து விடுகிறது (15x60= 900).

4) மேகமூட்டம் இல்லாத நிர்மலமான வானமாக
இருந்தால் மட்டுமே 900 கிலோமீட்டர் கடந்த
பிறகும் கூட, சந்திரன் நம் கண்ணுக்குத் தெரியும்.
இல்லாவிடில் மறைந்து விடும்.

5) குளச்சலில் தெரியும் சந்திரன் சமயங்களில்
சென்னையில் தெரியாமல் போகும். இதற்குக்
காரணம் குளச்சலுக்கும் சென்னைக்கும்
இடையிலான 723 கிலோமீட்டர் தூரமே.

6) வெறுங்கண்ணால் பார்க்கும்போது பிறையைச்
சரியாகப் பார்க்க இயலாமல் போவது இயல்பே.
ஏனெனில் மனிதக் கண்ணின் குவான்டம் திறன்
(quantum efficiency) என்பது மிகவும் குறைவே. அதாவது
(தோராயமாக)  கண்ணின் கார்னியாவில் விழும்
ஃபோட்டான்களில் 8 சதம் மட்டுமே விழித்திரையைச்
 சென்றடைவதாக ஒரு பரிசோதனையில் ரிசல்ட்
கிடைத்தது.

7) எனவே வெறுங்கண்ணால் பார்ப்பதற்குப் பதிலாக
சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலமும்
சந்திரனின் நகர்வை ஒவ்வொரு நிமிடமும் அறியலாம். 

8) செய்ய வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்திற்குச்
செல்ல வேண்டும். லட்சக்கணக்கான கிலோமீட்டர்
தூரத்தில் உள்ள, ஒரு புள்ளி போல மட்டுமே
தெரிகிற ஒரு வான்பொருளை (celestial object) 
கால்பந்து அளவுக்குப் பெரிதாக்கிக் காட்டும்
சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் அங்குள்ளன.

9) கணினி வரைபடங்கள் மூலமும் சந்திரனின் 
மாதத்தின் முதலாம் பிறையை, ஒவ்வொரு
நிமிடமும் அது எங்கே இருக்கிறது என்பதை
துல்லியமாக அறிய முடியும். இதெல்லாம்
கோளரங்கம் சென்றால் மட்டுமே சாத்தியம்.

10) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அறிவியல்
வளர்ச்சி அடையாத  காலத்தில் வெறுங்கண்ணால்
பிறையைப் பார்ப்பதும் அதற்கு சாட்சிகளை
வைத்துக் கொள்வதுமே ஒரே வழியாக இருந்தது.

11) இன்று அறிவியல் பிரம்மாண்டமாக  வளர்ந்து
நிற்கிறது. அது மனித குலத்தின் தேவையை
நிறைவேற்ற வல்லது.அதைப் பயன்படுத்துவது
அறிவுடைமை ஆகும்.

12) பூமிக்கு ஒரே ஒரு நிலவுதான் உண்டு. பூமிக்குப்
பதிலாக, யுரேனஸ் கோளில் மனிதன் குடியிருப்பதாக
வைத்துக் கொள்வோம். யுரேனசுக்கு 27 நிலவுகள்
உண்டு. அங்கு எப்படிப் பிறையைப் பார்ப்பது?
எல்லா நாளும் முதலாம் பிறைதான்! தினத்துக்கு
ஒரு நிலவில் முதல் பிறை தெரிந்து கொண்டிருக்கும்!
***************************************************************  

 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக