பூமி தட்டையா உருண்டையா?
கடல் நீர் ஏன் வெளியே ?சிந்தவில்லை?
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
"பூமி தட்டையாக இருப்பதால்தான் கடல் நீர்
வெளியே கொட்டாமல் கடலுக்கு உள்ளேயே
இருக்கிறது.பூமி உருண்டையாக இருந்தால்
கடல்நீர் வெளியே சிந்தி விடும்.எனவே பூமி
தட்டையானது."
இப்படி ஒரு வாதம் வைக்கப் படுகிறது. இதற்கு
எளிமையாகவும் சுருக்கமாகவும் ஒரு விளக்கம்
தருமாறு சில வாசகர்கள் கேட்டதன் பேரில்
பின்வரும் விளக்கத்தை அளிக்கிறோம்.
1) பூமி மிக அதிக நிறையுள்ள (mass) ஒரு பொருள்.
(இதன் நிறை தோராயமாக 6x10^24 கிலோகிராம்).
2) அதிக நிறையுள்ள பொருளுக்கு அதிகமான
ஈர்ப்புவிசை உண்டு.
3) பூமி தன் மீதான எல்லாப் பொருளையும் தன்னை
நோக்கி இழுக்கும். எனவே கடல் நீரையும் பூமி
தன்னை நோக்கி இழுக்கும்.
4) பூமியின் நிறை மையம் கொண்டுள்ள இடத்தை
நோக்கி, அதாவது பூமியின் மையத்தை நோக்கி,
கடல்நீர் இழுக்கப் படும். (pulled towards the centre of mass).
5) சதா சர்வ காலமும் கடல்நீரானது பூமியின்
மையத்தை நோக்கி புவியீர்ப்பு விசையால்
இழுக்கப் பட்டுக் கொண்டே இருக்கும்.
6) எனவே கடல்நீர் வெளியே சிந்துவது என்ற பேச்சுக்கே
இடமில்லை.
7) அண்ட வெளியில் பல்வேறு இடங்களில் இருந்து
பூமியை புகைப்படம் எடுத்துள்ளனர் விஞ்ஞானிகள்.
கோடிக்கணக்கான புகைப்படங்கள் இதுவரை
எடுக்கப் பட்டுள்ளன. அவை அனைத்தும் பூமியை
உருண்டையாகக் காட்டுகின்றன.
8) 1968ல் அப்பல்லோ-8 விண்கலத்தின் விண்வெளி
வீரர்கள் விண்வெளியில் இருந்து பூமியை
புகைப்படம் எடுத்து அனுப்பினர். இக்கட்டுரையுடன்
அப்படத்தை இணைத்துள்ளேன். இது உலகப் புகழ்
பெற்ற படம் ஆகும். இப்படத்தின் பெயர்
பூமியின் உதயம் ஆகும். சூரிய உதயம் போல
இது பூமியின் உதயம். பூமி அற்புதமான ஒரு
கோளம் (உருண்டை) என்பதை இப்படம்
உணர்த்துகிறது.
9) பூமி உருண்டை என்பது settled science. அதாவது
கோடிக்கணக்கான முறை நிரூபிக்கப்பட்டு
ஏற்கப்பட்ட ஒன்று. அதில் வாதத்திற்கே
இடமில்லை.
10) physics, maths என எதையும் கொண்டு வராமல்
எளிமையானதாக இவ்விளக்கத்தை அளிக்கிறோம்.
*****************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக