ஞாயிறு, 10 ஜூன், 2018

கணவனை அண்ணா என்று அழைப்பது ஏன்?
---------------------------------------------------------------------------------
மருள் மொழிக்கு பதில் மொழி
திராவிட கழகத்தில் உள்ள வழக்கறிஞர் பிராமண பாஷையை கிண்டல் செய்து பேசிய மருள் மொழிக்கு அன்புக்குரிய வைஷ்ணவ அறிஞர் எழுத்தாளர் ,கவி, ஸ்ரீ .உ.வே பத்மபாநாபன் அவர்கள் அளித்த பதில்
அன்பிற்குரிய அருள்மொழி மேடம்,
தமிழைச் சரியாக உச்சரிக்கக் கூடத் தெரியாதவர்கள் தமிழின் பெருமைக்கு வக்காலத்து வாங்கும் இக்காலத்தில்,தங்களைப் போன்ற தமிழ்ப் பேச்சாளர்களைக் காண்பது மனதுக்கு இதமளிக்கிறது.
ஆனால்,தங்களின் அழகான தமிழை,அசிங்கம் குடிகொண்டுள்ள தங்களின் மனதில் உள்ள வக்கர எண்ணங்களை வெளிப்படுத்த இந்த யூட்யூப் பதிவில் பயன்படுத்தியிருப்பதுதான் மிகவும் வேதனையளிக்கும் விஷயம்.தனக்குப் பிடித்த கொள்கையை அங்கீகரித்து ஒழுகும் சுதந்திரமும் உரிமையும் எல்லோருக்கும் உண்டு.அந்தவகையில்,தாங்கள் ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பின்பற்றி அதன்படி ஒழுகுவது என்பது உங்களின் உரிமை.
ஆனால்,அவ்வுரிமையையும் சுதந்திரத்தையும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பழக்க வழக்கங்களை எப்போதுமே கிண்டல் செய்து,நக்கலடித்துப் பேசுவதுவதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பதுதான் பச்சைத்தனமான அநாகரிகம்.நீங்கள் இந்த யூட்யூபில் பதிவிட்டுள்ளவை அனைத்துமே அருவருக்கத்தக்க நாற்றமடிக்கும் சாக்கடைகள். என்னைப் போன்றவர்களின் தகுதிக்கு அவற்றுக்கெல்லாம் பதில்சொல்வது என்பது தேவையற்ற வேலையென்றாலும்,அவற்றுள் ஒரு விஷயத்துக்கு மட்டும் நான் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில்,நான் பெருமைமிகுந்த பிராஹ்மண ஜாதியில் பிறந்தவன்;அறிவுள்ள ஆரிய வம்சத்தவன்;பண்பாட்டை உலகிற்கு வழங்கிய பார்ப்பன குலத்தைச் சேர்ந்தவன்.
“நாமெல்லாம் வீட்டில் கணவரை ‘மாமா’ என்றும்,வெளியில் மற்ற ஆண்களை ‘அண்ணா’ என்றும் அழைக்கிறோம்.ஆனால் அவா வீட்டில் கணவரை ‘அண்ணா’என்றும்,வெளியில் மற்ற ஆண்களை ‘மாமா’என்றும் அழைக்கிறார்கள்.இதுதான் அவாளோட நாகரிகம்!”என்று கிண்டல் அடித்து எங்கள் குலப்பெண்களை இழிவுபடுத்தியிருக்கிறீர்கள்.
நீங்களும் ஒரு பெண் என்பதையும் மறந்து அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று பேசியிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட ஒரு பேச்சு ஒரு வழக்கறிஞரின் வாயிலிருந்து வரக்கூடாத பேச்சு. இப்படி நீங்கள் பேசியவுடன் உங்களுக்கு முன் அமர்ந்திருப்பவர்களும் உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களும் கரகோஷமிட்டு,பலத்த சிரிப்பொலிகளை எழுப்பியதைக் கேட்கமுடிந்தது.
அந்தக் கரகோஷமும் ஆரவாரச் சிரிப்பும் ஏதோ உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதிபோல் நீங்கள் நினைத்துக்கொண்டு உங்கள் முகத்திலும் புன்முறுவலைத் திரும்பத் திரும்ப நீங்கள் இழையவிட்டதையும் என்னால் காணமுடிந்தது.இதைப் பார்க்கின்றபோது, என்ன தோன்றுகிறதென்றால்,ஒரு முழு முட்டாளின் பேச்சை சில அடிமுட்டாள்கள் ஆரவாரித்து அங்கீகரிக்கின்றபோது,அந்த முழுமுட்டாள் சந்தோஷ போதையில் தன்னை மறந்து சிரிப்பதுபோல் இருக்கிறது.
மேடம்,உங்களுக்குக் கொஞ்சமாவது மொழி அறிவிருந்தால் இப்படிப் பேசியிருக்கமாட்டீர்கள்.உங்கள் பெயருக்குத் தகுந்த தன்மை உங்களிடம் இல்லை. ‘அருள்மொழி’என்ற அழகான பெயரை வைத்துக்கொண்டு ‘இருள்மொழி’யை உதிர்த்திருக்கிறீர்களே,மேடம்!.
ஆரியர்கள் அதாவது பிராஹ்மணர்கள் அதாவது பார்ப்பனர்கள் தங்கள் இல்லங்களில் பண்டுதொட்டு வடமொழிகலந்த மணிப்ரவாள நடையில்தான் பேசுவது வழக்கம்.அவர்களது பேச்சில் ஸம்ஸ்க்ருதம் கலந்துதான் இருக்கும்.அவர்கள் வீட்டில் உபயோகிக்கும் ‘அண்ணா’என்ற சொல் நீங்கள் நினைப்பதுபோல் ‘உடன்பிறந்தவன்’என்ற பொருளை உட்கொண்டதன்று.அச்சொல் ‘அண்’என்ற வடமொழி வேர்ச்சொல்லிலிருந்து உருவானது. ‘அண்’என்பது உயிர்,உயிர்மூச்சு,வாழ்வு என்ற பொருள்களைத் தரும் வடமொழி வேர்ச்சொல். ‘அண்ண’என்றால் ‘என் உயிரே’, ‘என் உயிர் போன்றவனே’என்று பொருள்.அதாவது,தன் கணவனைத் தன் உயிராகவே நினைத்து விளிக்கும் சொல் அது. ‘உடன் பிறந்தவன்’ என்ற பொருளைத் தரும் ‘அண்ணன்’என்ற தமிழ்ச்சொல் அல்ல அது.
வடமொழியில் உடன் பிறந்த மூத்தவனை ‘ஜ்யேஷ்ட ப்ராதா’என்றழைப்பர். உடன் பிறந்த மூத்தவனை வடமொழியில் விளிக்க‘அண்ணன்’என்ற சொல்லைப் பயன் படுத்தமாட்டார்கள்.நீங்கள் சொல்வதுபோல் சகோதர உறவைக் குறிக்கும் சொல்லால் கணவனை அழைப்பதென்றால் ‘ப்ராதா’என்றுதான் அழைத்திருப்பார்கள்.அப்படி யாரும் பிராஹ்மணக் குடும்பங்களில் கணவனை அழைப்பதில்லை.ஆகவே மொழியறிவற்ற நீங்கள்தான் நாகரிகமில்லாத விளக்கம் கொடுக்கிறீர்களேயொழிய,கணவனை உயிராக மதிக்கும் நாகரிகத்தைக் கொண்ட எமது குலப் பெண்கள் சரியாகத்தான் பேசினார்கள்;பேசுகிறார்கள்;பேசுவார்கள்
அதைப்போலவே, ‘மாம’என்ற சொல் ஒரு வடமொழிச்சொல்.நீங்கள் சொல்வது போல் தாயுடன் பிறந்தவனைக் குறிக்கும் தமிழ்ச்சொல் அல்ல அது.தாயுடன் பிறந்தவனை வடமொழியில் ‘மாதுலன்’என்றழைப்பர். ‘மாம’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘எங்களைச் சேர்ந்தவர்’, ‘எங்களுக்கு வேண்டியவர்’என்று பொருள்.அதாவது,தன் உறவல்லாத, தனிப்பட்ட ஒரு ஆண்மகனை மரியாதை நிமித்தம் ‘எங்களுக்கு வேண்டியவர்’என்ற கருத்தில் அழைக்கப் பயன்படும் சொல்தான் அது.சாதரணமாக,அன்னியர் ஒருவர்மீது நாம் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தால் சில நேரங்களில் ‘நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்;எங்களைச் சேர்ந்தவர்’என்றெல்லாம் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
இந்தப் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தும் ஒற்றைச் சொல்தான் ‘மாம’என்பது.நீங்கள் சொல்வதுபோல் தாயுடன் பிறந்தவனை விளிக்கப் பயன்படுத்தும் தமிழ்ச்சொல்லான ‘மாமா’ என்ற சொல்லன்று அது.மற்ற ஆண்களைத் தன் தாயுடன் பிறந்தவனாக பாவித்து வடமொழியில் அழைப்பதென்றால் ‘மாதுல’என்றுதான் அழைக்கமுடியும்.அப்படி எங்கள் குலப்பெண்கள் யாரும் அன்னிய ஆடவனை தங்களின் மாதுலன் ஸ்தானத்தில் வைத்து அழைப்பதில்லை.
ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.ஒரே பொருளைத்தரும் பலசொற்களும் உண்டு.ஒருமொழியில் உள்ள ஒரு சொல் வேறு மொழியில் வேறு பொருளைத் தருவதாகவும் இருக்கும்.ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட பொருளைத் தரும் ஒரு சொல் கால தேச வர்த்தமானங்களுக்குத் தக்கபடியும் பொருள் மாற்றத்தை அடையும். மொழியறிவுள்ளவர்கள் இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் ஒரு சொல்லின் பொருளை அறிய முற்படுவர்.
ஆங்கிலத்தில் மாமன்,சிற்றப்பா,பெரியப்பா-இவர்கள் எல்லோரையுமே‘Uncle’என்ற ஒரே சொல்லால்தான் அழைக்கிறார்கள்.ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவன் ஒரு அன்னிய ஆடவனைப் பார்த்து ‘Uncle’என்றழைத்தால் அச்சிறுவனின் தாய், தன் பிள்ளை அந்த ஆடவனை சிற்றப்பாவாகக் கருதிவிட்டான் என்று நினைத்து அந்த ஆடவனைத் தன் படுக்கைக்கு அழைத்துவிடலாமா? அந்த ஆடவனும் அதேமுறையில் எண்ணி அப்பெண்ணைச் சேர எண்ணிவிடலாமா?அருள்மொழி மேடம்!ஒரு மொழியின் சொல்லை நீங்கள் விளக்கும் விதத்தின்படி பார்த்தால் இனி எந்தச் சிறுவனும் அன்னிய ஆடவன் ஒருவனைப் பார்த்து ‘Uncle’என்று விளித்து விட்டால் பெரும் சிக்கலாகிவிடுமே!
வயதில் மூத்த பெண்களையும் உயர்பதவியில் இருக்கும் பெண்களையும் மரியாதை நிமித்தமாக ஆங்கிலத்தில் “Madam’’என்று அழைக்கிறார்கள்.நானும் அந்தக் காரணத்தால்தான் அச்சொல்லால் தங்களை அழைக்கிறேன்.அந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் “A woman who is in charge of the PROSTITUTES in a Brothel”என்று பொருள் சொல்லப்பட்டிருகிறது.அங்கில அகராதியில் சொல்லப்பட்ட பொருளில்தான் நான் தங்களை அழைத்ததாக நீங்கள் நினைத்து,என்னைத் தாங்கள் தவறாக எண்ணிவிடாதீர்கள்.ஏனெனில் தங்களின் “மேதாவிலாசம்”அப்படிப்பட்டது!
பிராஹ்மணர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற உங்களது குதர்க்க புத்தியால், ஒருசொல்லின் உண்மையான பொருளை உணராமல் தான்தோன்றித்தனமாக அதற்குப் பொருள் சொல்லி உங்களையே நீங்கள் அசிங்கப்படுத்திக்கொண்டுவிட்டீர்களே மேடம்!
…… “பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாக இருப்பதுடன் பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாக இருக்கிறது……புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்துகொள்வதாலும் பெண்சாதி ஒரு புருஷனைத்தவிர வேறு எந்தப் புருஷனையும் எந்தக்காரணம் கொண்டும் மணந்துகொள்ள முடியாததற்கும் இந்தக் குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாக இருக்கிறது…..ஆகையால் ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும் பிள்ளை பெறுவதும் இடையூறான காரியமாகிறது அதிலும் பெண்களின் சுயேச்சைக்கு கர்ப்பம் என்பது கொடிய விரோதியாக இருக்கிறது….”என்று ஆண்களையும் பெண்களையும் வன விலங்குகளாக்க, இப்படிப்பட்ட ‘தத்துவ முத்துக்களை’ உதிர்த்த “தமிழர் தலைவனின்”கொள்கைகளை ஏற்று அதன்படி ஒழுகும் உங்களின் “நாகரிகத்தின் பெருமையைப்”பேச வார்த்தைகளே இல்லை! “ஒரு பெண், தான் விரும்பும் எத்தனை ஆண்களுடன் வேண்டுமானாலும் படுத்துக்கொள்ளலாம்,தவறில்லை.”என்று போதித்திருக்கிறார் உங்கள் தலைவர்.
அவரது கொள்கையைப் பின்பற்றி வாழும் நீங்கள்,ஒரு மொழியில் உள்ள ஒரு சொல்லின் பொருள் தெரியாமல் அதற்கு அவப்பொருள் சொல்லிப் பண்பட்ட எங்கள் குல மரபை விமர்சிக்க முற்பட்டதுதான் பெரிய வேடிக்கை.
இதைவிட, நீங்கள் செய்யும் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் உங்களின் சாக்கடைப் பண்பாட்டை “தமிழ்ப் பண்பாடு”என்றுவேறு சொல்லித் தமிழர்களின் உண்மையான பண்பாட்டையே கேவலப்படுத்தும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் தலைவனின் கொள்கையைப் பின்பற்றி வாழும் உங்கள்பண்பாடு தமிழ்ப் பண்பாடல்ல, மேடம்.தொல்காப்பியம் முதலாக உள்ள தமிழ்ச்சங்க இலக்கியங்களில் உங்கள் தலைவனின் கொள்கைகளில் ஏதாவதொரு கொள்கையாவது இடம்பெற்றிருக்கும் ஒரு இடத்தை உங்களால் காட்ட முடியுமா,மேடம்?
தமிழ்நாகரிகம் ஆரியத்தின் ஒரு அங்கம்தான்.ஆரியத்தின் அங்கமாக இருப்பதில் அக்காலத் தமிழர்கள் பெருமிதம் கொண்டிருந்தார்கள்.தமிழனின் தலைசிறந்த பண்பாட்டை உங்களது தரங்கெட்ட தலைவனின் தரங்கெட்ட கொள்கைகளோடு இணைத்து அசிங்கப்படுத்தாதீர்கள்.மேடம்,உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.எக்காலத்திலும் எவ்வூரிலும் பிராஹ்மணர்களாகிய எங்களுக்குள்ள உயர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது.அன்று ஒருவகையில் இருந்தால் இன்று ஒருவகையில் அவ்வுயர்வு இருக்கிறது.இன்று மற்ற ஜாதிக்காரர்கள் நடை,உடை,பாவனை,பேச்சு,உணவு முதலியவற்றில் பிராஹ்மணர்களாக மாற (அம்முயற்சி பலிக்குமா,சமூகம் அதை ஏற்குமா என்பது வேறு விஷயம்) முயற்சிசெய்து கொண்டிருகிறார்கள்,மேடம்,தெரியுமா உங்களுக்கு?
நீங்கள் சொல்வதுபோல் நாங்கள் உயர்ந்தவர்களில்லையென்றால் எங்கள் ஜாதி மரபைப் பின்பற்ற மற்றவர்கள் ஏன் விரும்ப வேண்டும்? பிறவியிலேயே எங்களுக்கு அமைந்த இந்த உயர்வின்மீது உங்களுக்குள்ள பொறாமைதான் இப்படியெல்லாம் எங்களைப்பற்றி அவதூறாகப் பேச உங்களைத் தூண்டுகிறது.இந்த சமூகத்தில் எங்களை மட்டுமே நீங்கள் குறிவைத்துத் தாக்குவதற்கு காரணம் என்னவெனில்,எங்கள் பெருமைகுறித்தும் உயர்வுகுறித்தும் உங்கள் அடிவயிற்றில் கனன்று எரிந்து கொண்டிருக்கும் பொறாமைத்தீதான்.உங்கள் தலைவன்போல் எத்தனை தலைவன் வந்தாலும் மக்கள் மனங்களை மாற்றிவிடமுடியாது.ஏனெனில் மக்கள் உங்களை நன்றாகப் புரிந்துகொண்டு விட்டார்கள்.
பெண்கள் பொது வாழ்க்கைக்கு வந்தால் பேச்சில் கண்ணியம் வேண்டும்.வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினால் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.கொள்கையளவில் நீங்களும் நானும் வடதுருவம் தென்துருவம் என்ற நிலைதான் என்றாலும் நீங்கள் ஒரு பெண் என்பதால் ஒரு அளவுக்குமேல் உங்களை விமர்சிக்க எனக்கு மனம் வரவில்லை.ஏனெனில்,பெண்மையை மதிப்பவன் நான்.உங்களது யூட்யூப் பதிவிற்குக் கீழே உங்கள் கருத்துக்கு எதிர் வினையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களைப் பார்த்தீர்களா,மேடம்? எவ்வளவு கீழ்த்தரமாக உங்களைத் திட்டமுடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாகத் திட்டி எழுதியிருக்கிறார்கள்.
மற்றவர்கள் பாணியில் சொன்னால் நன்றாகக் கழுவி ஊற்றியிருக்கிறார்கள்.இது தேவையா உங்களுக்கு? ‘அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை’என்றுகூட நீங்கள் சொல்வீர்கள்.உங்கள் மீது இந்த அனுதாபம் என் மனதில் வந்ததற்குக் காரணம் நீங்கள் ஒரு பெண் என்பதால்தான்.மற்றபடி வேறொன்றும் இல்லை.இப்படிப்பட்ட கீழ்த்தரமான வசவுகள் உங்கள் கருத்துக்களுக்கு எதிர்வினையாக வந்ததற்குக் காரணம் உங்களது தரக்குறைவான பேச்சுதான்.விதைத்ததுதானே விளையும்!
தொடர்புடைய அருள்மொழி அவர்களின் பேச்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக