ஞாயிறு, 10 ஜூன், 2018

கணக்கின் தீர்வில் முன்னேற்றம்!
----------------------------------------------------------
9 கேள்விக்கு சரியான விடை அளித்தும்
ஏனைய கேள்விக்கு தவறான விடை அளித்தும்
உள்ளதாகக் கருதி கீழ்க்கண்ட combinationஐ
வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
இதில் மொத்தம் 7 வாய்ப்புகள் உள்ளன.
இதில் ஒன்றை ஏற்கனவே ஒரு வாசகர் கூறி
உள்ளார். மீதி 6 வாய்ப்புகளை இணைக்கப்பட்ட
படத்தில் கொடுத்துள்ளேன்.

இவ்வாறு 35 வாய்ப்புகள் உள்ளன என்கிறார் வாசகர்.
சரியாக விடையளித்த மற்றும் தவறாக விடையளித்த
கேள்விகளின் எண்ணிக்கையை மாற்றினால் மொத்த வாய்ப்புகளும் கிடைக்கும். அதன் பிறகு அதை generalise
செய்ய வேண்டும்.

வாசகர்களே, கணக்கைக் கைவிட்டு விடாதீர்கள்!
தொடர்ந்த்தி தீர்வு காணும் வரை முயலுங்கள்.
தீர்வு காண ஒரு யுகம் ஆனாலும் சரி! 

காலா ரஜனியின் படமே! வசனங்கள் ரஜனியின் விரும்பியபடி
வழிகாட்டலில் எழுதப்பட்டது . ஒரு வார்த்தை கூட
ரஜனியின் கருத்துக்கு எதிராக இல்லை! எழுதவில்லை
பா ரஞ்சித் பேட்டி!

மு க அழகிரி முதல்வராக வாய்ப்பு
பிரகாசமாக இருப்பதாக ஜோசியன்
சொல்லி இருக்கிறான். அழகிரி உற்சாகம்!
களத்தில் இறங்க முடிவெடுத்தார்!  குகிறார்

தனக்கு எதிரான  
வைகோவை மண்டியிட வைத்தார் 
ஸ்டாலின். தனக்கு எதிரான சீமானை 
மண்டியிட வைத்தார் வைகோ.
வலுத்தது வாழும்!

ஒரு பாதையில் நாம் வேகமாகச் சென்று

பேச்சுக்கே இடமில்லை!
-------------------------------------------------
1) பார்ப்பன எதிர்ப்பு என்பது தமிழகத்தில் இன்று
பொருளற்றது. தமிழகத்தில் பிற்பட்ட மற்றும்
தலித் சாதியம் இன்று மேலோங்கி நிற்கிறது.இவர்களின் சாதிவெறியை கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கவே
பார்ப்பன எதிர்ப்பு இன்று பயன்படுகிறது.

2) பெரியாரின் பெண் விடுதலை என்பது மிகவும்
மேம்போக்கானது. உற்பத்தி முறை பற்றிய
உற்பத்தி உறவுகள் பற்றிய எந்த அறிவும்
இல்லாமல் சொல்லப்பட்டது. பெரியார் பிரசவித்த
திமுக போன்ற இயக்கங்களிலேயே பெரியாரின்
பெண் விடுதலைத் தத்துவங்கள் (???) செயல்படுத்தப்
படவில்லை. சோவியத்தில் லெனின் ஸ்டாலின்
காலத்தில் செயல்படுத்தப்பட்டது போலத்தான்
இந்தியாவிலும் பெண் விடுதலையைச் செயல்படுத்த
முடியும்.

3) 1940களில் தஞ்சையில் சீனிவாசராவ் செயல்படுத்திய
வேலைத்திட்டத்தை, உற்பத்திச் சக்திகளின்
வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றி இந்தியா முழுவதும்
பயன்படுத்த வேண்டிய தேவை இன்று உள்ளது.
பின்தங்கிய  நிலவுடைமை உற்பத்தி உறவுகள்
நிலவும் பீஹார் போன்ற இடங்களில் இது பொருந்தும்.

4) இன்று அம்பேத்காரியம் என்பதே ஏகாதிபத்திய
ஆதரவு பின்நவீனத்துவ NGO அரசியலாக உள்ளது.
இந்த அரசியலின் குறியீடாகவே இன்று அம்பேத்கார்
உள்ளார். இதைத் தாக்கித் தகர்க்காமல் ஒரு
மில்லி மீட்டர் கூட இந்திய அரசியலில் மார்க்சியம்
முன்னேற முடியாது.  

5) எனவே காலாவதியாகிப்போய் நஞ்சாகிப்போன குட்டி முதலாளித்துவத் தத்துவங்களை மார்க்சியத்துடன்
சேர்க்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
வைகோவை தெலுங்கர் என்று நான் சொல்லவில்லை
என்று நேற்றைய டிவி பேட்டியில் கூறும்போது
எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. சீமான் எப்படி
வேண்டுமானாலும் தன் நிலையை மாற்றிக்
கொள்ளட்டும். வைகோ தெலுங்கர் என்பது
சூரியன் கிழக்கே உதிப்பது போன்ற உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக