சனி, 23 ஜூன், 2018

தூய்மையற்ற பொருள்முதல்வாதம்!
ஞானியின் கருத்து சரியா தவறா?
யிங் யாங் தியரியை மாவோ ஏற்றாரா?
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
ஞானி கூறுகிறார்:
நூறு சதம் தூய்மையான பொருள்முதல்வாதம்
என்பது கிடையாது. அதே போல நூறு சதம்
தூய்மையான கருத்துமுதல்வாதம் என்பதும்
கிடையாது. இது ஞானியின் கருத்து.
(பார்க்க: மார்க்சியம் அழிவதில்லை என்ற
ஞானியின் நூல்)

ஞானியின் தரப்பு விளக்கம்!
---------------------------------------------------
எந்த ஒரு பொருள்முதல்வாதத்திலும்  கருத்தின்
கலப்பு கொஞ்சமாவது இருக்கும். சிறிதேனும்
கருத்து கலக்காத, ஓரளவேனும் கருத்தின் முதன்மை
அங்கீகரிக்கப் படாத நூறு சதம் சுத்தமான அக்மார்க் பொருள்முதல்வாதம் இந்த உலகில் எங்கும் கிடையாது.

அதே போல, கருத்துமுதல்வாதத்திலும் பொருள்
கலந்திருக்கும். பொருள் கலக்காத கருத்தால்
மட்டுமேயான பரிசுத்தமான கருத்துமுதல்வாதம்
என்பது உலகில் எங்கும் கிடையாது.

சீனத்தின் யிங் யாங் கோட்பாடு இதைத்தான்
சொல்கிறது என்கிறார் ஞானி.

மறுப்புகள் வரவேற்கப் படுகின்றன!
-----------------------------------------------------------------
ஞானி கூறுவது சரியா, தவறா?
சரி என்றால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தவறு என்றால், ஞானி கூறுவது தவறு என்று
நிரூபிக்க வேண்டும்.

சீனத்தின் யிங் யாங் கோட்பாட்டைத் துணைக்கு
அழைக்கிறார் ஞானி. அது என்ன யிங் யாங் தியரி?
பொருள்முதல்வாத வகுப்பு எடுக்கும் மார்க்சிய
அறிஞர்கள் இதுபற்றி அணிகளுக்கு ஏதாவது
கற்பித்து இருக்கிறார்களா?

அருள்கூர்ந்து மார்க்சிய அன்பர்கள் இதற்குப்
பதில் கூறுமாறு வேண்டுகிறேன்.
******************************************************

பொருள் வேறு, கருத்து வேறு. இரண்டும் ஒன்றல்ல,
வேறுபட்டவை. பொருளைப் பார்த்த பிறகு
அதன் பிரதிபலிப்பு மூளையில் ஏற்பட்டு
கருத்து (அல்லது சிந்தனை) உருவாகிறது.
ஆக, பொருளே முதன்மையானது; பொருளின்
பிரதிபலிப்பே சிந்தனை. இதுதான் மார்க்சியம்
தரும் விளக்கம். இதை நான் இங்கு எளிமையாகச்
சொல்லி இருக்கிறேன்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக