வெள்ளி, 8 ஜூன், 2018

ப்ராவில் கிழிசலா? உள்பாவாடையில் கிழிசலா?
வளர்ந்து கொண்டே இருக்கும் கணிதம்!
பதிவைத் தொடர்ந்து மேலெழும் அறிவியல்!
ஒரு கேள்வி ஓராயிரம் கேள்வியாக!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
ப்ராவில் (ப்ரா) கிழிசல் இருக்கிறது என்று ஒரு
பதிவு எழுதினால், அந்தப் பதிவு அத்தோடு நின்று
விடாது.வாசகர்களுக்கு resonance thinking ஏற்பட்டு,
உள்பாவாடையிலும் கிழிசல் இருந்ததாகச் சொல்லி
இன்னொரு பதிவை எழுதுவார்கள். இவ்வாறு
பதிவுகள் குட்டி போடும்.

ஆனால் அறிவியல் பதிவுகள் அப்படிக் குட்டி
போடுவது அபூர்வம். ஆனால் அபூர்வமானவதை
எல்லாம் இயல்பானதாக நிகழ்த்திக் காட்டுகிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.

நீட் தேர்வில் இயற்பியலில் 171 மதிப்பெண் பெற்ற
ஒரு மாணவி, எத்தனை கேள்விகளுக்கு சரியான
விடை (மற்றும் தவறான விடை) எழுதி இருப்பார் என்ற
கேள்வியைக் கேட்டு இருந்தோம்.

இக்கேள்விக்கான விடையும் தொடர்ந்த கேள்விகளும்
வந்துள்ளன. வாசகர்கள் இவற்றின் மதிப்பை
உணர்ந்து இவற்றைப் படித்தால் பயன் பெறலாம்.
இல்லையேல், பைபிளில் கூறுவது போல
(casting pearls before swine) ஆகி விடும்.

எமது பதிவில் பொறியாளர் திரு வேல்முருகன்
சுப்பிரமணியன் மேலும் ஒரு கேள்வியை
முன்வைக்கிறார். அவரின் கேள்வி இதுதான்!

ஒரு மாணவர் பெற்ற மதிப்பெண்ணும் அவர் பதிலளிக்காமல் 
விட்ட கேள்விகளின் எண்ணிக்கையும் சமம் எனில், 
அவர் சரியாக பதிலெழுதிய கேள்விகள் எத்தனை? 
இந்தக்கேள்விக்கு ஒற்றைப்பதிலதான் உண்டா? 
ஆம்/இல்லை என்று வாசகர்கள் நிரூபிக்கலாம். ! 

நீட் தேர்வில் இயற்பியல் பகுதியில் மொத்தம் 
45 கேள்விகள். ஒவ்வொரு சரியான விடைக்கும்
4 மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண்கள் 
45x 4=180. இந்த விவரங்களுடன் மேற்கூறிய 
கணக்கைச் செய்யவும்.

கணக்கின் விடை 9 என்பதைப் பலரும் கூறி 
விடுவர். (9x4 =36; 45-9=36). இந்தக் கணக்கிற்கு 
ஒரே ஒரு விடை மட்டும்தான் உண்டா?
அல்லது நிறைய விடைகள் சாத்தியமா என்பது 
அடுத்த கேள்வி.
Does this sum have an UNIQUE solution or not?

வாசகர்களின் விடைகள் வரவேற்கப் படுகின்றன.
*********************************************************          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக