திங்கள், 25 ஜூன், 2018

era = நீட்டம்
-------------------
சகாப்தம் என்றும் இல்லாமல், ஆண்டு என்றும்
இல்லாமல், வேறொரு நல்ல பொருத்தமான
சொல்லைக் கண்டு பிடித்துக் கொடுத்து விட்டால்
சிக்கல் தீர்ந்து விடும். யுகம் என்பது வடசொல்.
அதைத் தவிர்த்த வேறொரு சொல் era என்பதற்கு
என்ன?

நீள்காலம், நீளாண்டு, நீட்டம் ஆகியவற்றில்
நீட்டம் என்பது பொருத்தமாக உள்ளது.
பொது நீட்டம், பொது நீட்டத்திற்கு முன் என்று
அழகாக அமைந்து விடும்.
வெள்ளத்(து) அனையது மலர்நீட்டம் என்கிறார்
வள்ளுவர். எனவே நீட்டம் என்ற சொல்லைப்
பரிந்துரைக்கிறேன்.  


தொடராண்டு என்பதையும் பரிசீலிக்கலாம்.
என்னைப் பொறுத்தமட்டில், ஒரு புதிய
கலைச்சொல்லை ஆக்கும்போது, adjective போட்டு
ஒரு சொல்லை உருவாக்குவதை விரும்பவில்லை/
ஆண்டு என்பதற்கு தொடர் என்று ஒரு adjective
போடுவதை விட,  adjective இல்லாமல் உருவாக்கலாம்
என்பது என் கருத்து. வேறு வழியே இல்லாமல்
போனால்தான், adjective போட்டு ஒரு சொல்லை
உருவாக்குவதை ஏற்க இயலும். மற்றப்படி
வேறு ஆட்சேபம் எதுவும் தொடராண்டு அல்லது
ஆண்டுத்தொடர் என்ற சொல்லுக்கு இல்லை.

அடுத்து, கசப்பான பல அனுபவங்கள் காரணமாக
புதிய கலைச்சொல் ஆக்கத்தில் நான் முனைந்து
ஈடுபடுவதில்லை. நான் எழுதுகையில் எனக்குத்
தேவையான கலைச்சொற்களை உருவாக்கிக்
கொள்வதோடு நின்று விடுகிறேன். இப்போது
உங்களுடைய ஆர்வம் காரணமாகவே, அதனால்
தூண்டப்பட்டு, நான் சில சொற்களை உருவாக்க
முயன்றேன்.
மற்றப்படி, பொதுவான கலைச்சொல் ஆக்கத்தில்
எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை.


நீங்கள் கூறிய அனைவரையும் நான் அறிவேன்.
சுந்தரராஜன், சந்திரசேகர் ஆகியோர்
தொலைதொடர்பில் தொழிற்சங்கத்
தலைவர்கள். ஏ வி வெங்கடராமன் மத்திய
அரசு ஊழியர் மகா சம்மேளனத் தலைவர்.

பல சொற்கள் வரட்டும். வரவேற்போம். தக்க
சொல்லை சொல்லாய்வில் தங்களை ஈடுபடுத்திக்
கொண்டோர் முடிவு செய்யட்டும்..


யின் யாங் குறித்து மாவோ எதுவும்
எதிர்மறையாகச் சொல்லவில்லை. அது
தாவோயிஸத்தின் ஒரு கூறுதானே. மாவோவுக்கு
தாவோயிசம் (அதன் முற்போக்கு அம்சங்கள்)
உடன்பாடுதானே!

பிரிஜிட் காப்ராவின் TAO OF PHYSICS படித்திருக்கிறேன்.
என்றாலும் அவர் கூறுவதை முழுமையாக ஏற்கவில்லை.

Consciousness என்பதே பொருள்தான், அதாவது
பொருளின் ஒரு நிலையாக இருக்கக் கூடும்
(may be a state of matter) என்ற நோக்கில் ஆய்வுகள்
நடைபெற்று வருகின்றன. perceptron, perceptronium
என்று உணர்வு என்னும் பொருளுக்கு பெயர்
வைக்கும் முயற்சிகளும் நடைபெற்று
வருகின்றன. ஆய்வு முடியவில்லை.
காலப்போக்கில் மனஉணர்வும் ஒரு பொருளே
என்று முடிவு வந்து விட்டால், கான்ட், ஞானி,
பிரிஜிட் காப்ரா எல்லோரும் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டு விடக்கூடும்.
நான் யோசித்துப் பார்த்ததில், மனஉணர்வும்
ஒரு பொருளாக இருக்கக்கூடும் என்ற எண்ணம்
என் மனதில் மேலோங்கி நிற்கிறது.      


அருள் கூர்ந்து பிறழ் புரிதலுக்கு இலக்காக வேண்டாம்.
மனதில் ஏற்படும் உணர்வு, அதாவது
concsciousness என்பதே ஒரு பொருள்தான் என்று
முடிவு வந்துவிட்டால், என்ன ஆகும்?
கருத்தமுதல்வாதம் நொறுங்கி விடும்.
எல்லாம் பொருளே என்பது உறுதியாகி விடும்.
பொருள்முதல்வாதம்  என்ற ஒரே ஒரு தத்துவம்
மட்டுமே இருக்கும். இது நடக்கக் கூடும் என்று
நான் நினைக்கிறேன்.

 சிந்தனை என்பதும் ஒரு பொருளே, அதன் பெயர்
பெர்செப்ட்ரோனியம் என்று முடிவாகி விட்டால்,
ஆதிசங்கரர் முதல் காண்ட், ஞானி, நாகராஜன்
எல்லோரும் மூட்டை கட்ட வேண்டியதுதான்.      


.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக