புதன், 20 ஜூன், 2018

மோடி அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு எது?
ஏன் தடை செய்தார்கள்? 
மக்கள் அதிகாரம் அமைப்புக்குத்  தடை ஏன்?
தடை உத்தரவின் நகல் எம்மிடம் உள்ளது!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
மக்கள் அதிகாரம் என்ற அமைப்பை மோடி அரசு
தடை செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் மோடி அரசு மக்கள் அதிகாரம் என்ற
அமைப்பைத் தடை செய்யவில்லை.

அதற்கு மாறாக, நியூட்டன் அறிவியல் மன்றத்தைத்
தடை செய்து மோடி அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது.
இதற்குக் காரணம் டோனால்ட் டிரம்ப் ஆவார்.

இந்தியா ரகசியமாக அணுகுண்டு வெடிப்பை
நிகழ்த்தி உள்ளது என்று கூறிய டிரம்ப் அதற்கு
ஆதாரமாக, நியூட்டன் அறிவியல் மன்றம்
வெடித்த  பல்வேறு அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன்
குண்டு கட்டுரைகளைச் சுட்டிக் காட்டினார்.
இந்தியா மீது .பொருளாதாரத் தடை விதிக்க நேரிடும்
என்றும் மோடியை டிரம்ப் எச்சரித்தார்.
இதனால் நிலைகுலைந்து போன மோடி, நியூட்டன்
அறிவியல் மன்றத்தைத் தடை செய்து உத்தரவிட 
ராஜ்நாத் சிங்கிற்குக் கட்டளை இட்டார்..

முன்னதாக நியூட்டன் அறிவியல் மன்றம் குறித்து
விவாதிக்க மோடியின் அழைப்பின் பேரில்,
ஹெச் ராஜா, முரளிதர ராவ், தமிழிசை ஆகியோர்
டெல்லி சென்றனர். எந்த விமானத்திலும் டிக்கட்
கிடைக்காத காரணத்தால், தனி விமானம் அமர்த்தி
அவர்கள் மூவரும் டெல்லி சென்றனர்.

நியூட்டன் அறிவியல் மன்றத்தைத் தடை செய்யலாம்
என்று ஹெச் ராஜாவும், முரளிதர ராவும் கூறினார்.
ஆனால் "தடை தேவையில்லை, அது ஒரு அறிவியல்
அமைப்பு" என்று நமக்கு ஆதரவாகப் பேசினார்
தமிழிசை. இதற்கு காரணம் தமிழிசை அறிவியல்
(மருத்துவம்) படித்தவர் என்பதே.

நியூட்டன் அறிவியல் மன்றம் எழுதும்  அறிவியல்
கட்டுரைகளை வாசகர்கள்  படிப்பதில்லை என்பது
கண்டனத்துக்கு உரியது. இந்த நிலை நீடித்தால்
இது போன்ற கட்டுரைகளை எழுதி  உங்களைப்
படிக்க வைக்க நேரிடும் என்று கூறி அனைவரையும்
எச்சரித்து விடை பெறுகிறேன்.
*********************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக