ஒதுக்கீட்டுப் பிரிவினரும் பொதுப் பிரிவினரும்!
நீட் தேர்ச்சி விகிதம்: ஓர் ஒப்பீடு!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
2018 நீட் UG தேர்வு முடிவுகள் வந்து விட்டன.
தேர்வு எழுதியோர் = 12,69,922
தேர்ச்சி அடைந்தோர் = 7,14,562
தேர்ச்சி சதம் = 56.27
இடஒதுக்கீட்டுப் பிரிவில் தேர்வு எழுதியோர்
(OBC+SC+ST) = 803709
தேர்ச்சி = 4,46,246
தேர்ச்சி சதம் = 55.52
பொதுப்பிரிவில் தேர்வு எழுதியோர் = 4,66,213
தேர்ச்சி = 2,68,316
தேர்ச்சி சதம் = 57.55
இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55.52 சதம் தேறியுள்ளனர்.
பொதுப் பிரிவினர் 57.55 சதம் தேறியுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் பாரதூரமான வித்தியாசம்
எதுவும் இல்லை. ஏறத்தாழ இரண்டும் சமம்
என்றே கூறலாம். இங்கு ஒட்டு மொத்தமாக
தேறியுள்ளவர்கள், அதாவது தேசிய சராசரி
56.27 சதமாக உள்ளது. தேசிய சராசரி தேர்ச்சிக்கும் (56.27)
இடஒதுக்கீட்டுப் பிரிவின் தேர்ச்சிக்கும் (55.52)
PRACTICALLY வித்தியாசம் எதுவும் இல்லை.
இவை அனைத்தும் புள்ளி விவரங்கள்!
எனவே, இட ஒதுக்கீடு வழங்குவதால்,
தகுதி திறமையில் குறைந்தவர்கள்
இடங்களைப் பெறுகிறார்கள் என்ற வாதம்
நொறுங்கிப் போய் விடுகிறது.
பொதுப்பிரிவினர் 60 சதம் தேர்ச்சி பெற்றும்
இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 30 சதம் தேர்ச்சி
பெற்றதுமான ஒரு நிலைமை ஏற்பட்டு இருந்தால்,
இட ஒதுக்கீட்டில் வருபவர்கள் தகுதி திறமை எதுவும்
இல்லாதவர்கள் என்று சொல்லலாம். அதற்கு
வழியே இல்லை. உயர் வகுப்பினருக்கு நிகராக
சாதனை படைத்த சூத்திர பஞ்சம மாணவர்களை
நியூட்டன் அறிவியல் மன்றம் வாழ்த்துகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக சூத்திர பஞ்சம
மாணவர்களை IIT, JEE, AIPMT, நீட் தேர்வுகளை
எழுதுமாறு ஊக்குவித்து வந்தது நியூட்டன்
அறிவியல் மன்றம். அதன் விளைவாக இன்று
சூத்திர பஞ்சமர்கள் IITயிலும் மருத்துவப்
படிப்பிலும் இடம் பெறுகின்றனர் என்ற
நிதர்சனம் கண்டு நியூட்டன் அறிவியல் மன்றம்
பெருமிதம் கொள்கிறது.
முக்கிய குறிப்பு:
பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில்
கணிசமானோர் NCL OBC என்பது குறிப்பிடத்
தக்கது. அதையும் கணக்கில் கொண்டால்,
தேர்ச்சி பெற்ற சூத்திர பஞ்சமர்களின் எண்ணிக்கை
உயர் வகுப்பினரின் தேர்ச்சியை மிஞ்சி விடும்
என்பதே உண்மை.
NCL = Non Creamy Layer
*****************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக