திங்கள், 25 ஜூன், 2018

மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ் சொன்னாரா?
மார்க்ஸ் கூறியதன் சரியான மொழிபெயர்ப்பு!
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------  
மார்க்சின் மதம் பற்றிய பிரசித்தி பெற்ற மேற்கோள்
ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது. அதன் ஆங்கில
மொழிபெயர்ப்பு இதுதான்: 
Religion is the sigh of the oppressed creature, the heart of a
heartless world, and the soul of soulless conditions. It is the
opium of the people. -----Karl Marx.
A contribution to the critique of Hegel's Philosophy of Right:
Introduction. Written by Marx in 1843.
ஹெக்கல் எழுதிய உரிமையின் தத்துவம் என்ற
நூல் மீதான விமர்சனத்தின் முன்னுரையில்
காரல் மார்ஸ் இந்த மேற்கோளைக் கூறுகிறார்.
மார்க்ஸ் இதை எழுதியது 1843ல். அப்போது
மார்க்சுக்கு வயது 25.

இதற்கு தமிழகத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வரும்
தவறான மொழிபெயர்ப்பு:
"மதம் ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சு; அது இதயமற்ற 
உலகில் ஓர் இதயம்; ஆத்மா இல்லாத நிலைமைகளில் 
அது ஒரு ஆத்மா; அது மக்களுக்கு அபின்"/

இந்த மொழிபெயர்ப்பு  எப்படி இருக்கிறது என்று 
பார்ப்போம். 
He takes bath in the river என்பதை 
"அவன் நதியில் தன் குளிப்பை எடுத்தான்"
என்பது போல் இருக்கிறது.

அது என்ன, ஆத்மா இல்லாத நிலைமைகளில் அது ஒரு 
ஆத்மா? இது என்ன தமிழாக்கம்?

எனவே மிகச் சரியான துல்லியமான தமிழ் 
மொழிபெயர்ப்பை தமிழ்ச் சமூகத்திற்கு
முன்வைக்கிறோம். இது பல ஆண்டுகளாக 
நான் பயன்படுத்தி வரும் மொழிபெயர்ப்புத்தான்.

சரியான துல்லியமான எமது மொழிபெயர்ப்பு!
---------------------------------------------------------------
"மதம் என்பது இதயமற்ற உலகில் ஒரு இதயம்;
அது ஒடுக்கப் பட்டவர்களின் நிம்மதிப் பெருமூச்சு;
அது ஒரு உயிராகவே மதிக்கப் படாதவர்களின் உயிர்;
அது வாழ்வின் வலிகளை மரத்துப் போகச்செய்யும்
ஒரு மருந்து".

ஜெர்மன் மொழியில் மார்க்ஸ் பயன்படுத்திய அபின் 
என்ற சொல், அறுவை சிகிச்சைகளின்போது நோயாளி 
வலியை உணராமல் இருக்கும் பொருட்டு, மருத்துவர்கள் 
தரும் மரப்பு மருந்து. மார்ஃபைன் போன்றது. மார்க்ஸ் 
எழுதிய ஜெர்மன் சொல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பாக 
opium என்ற சொல் ஆங்கிலப் பதிப்புகளில் இருந்தது.
அதைத் தமிழில் நம்மவர்கள் அபின் என்று மொழிபெயர்த்து 
விட்டனர்.

ஆக, பிரசித்தி பெற்ற மார்க்சின் மேற்கோளுக்கு 
சரியான மொழிபெயர்ப்பாக உள்ள இதை தமிழ்ச் 
சமூகம் ஏற்கட்டும். குட்டி முதலாளித்துவம் இதை 
ஏற்காமால் தனது அரபாத் தனத்தை வெளிக்காட்டும்.
ஆனால் இது மட்டுமே மார்க்சின் கூற்றின் மிகச் 
சரியான மொழிபெயர்ப்பு!
---------------------------------------------------------------------------
பின்குறிப்பு: உண்மையில் இது மொழிபெயர்ப்பு அல்ல.
காரல் மார்க்ஸ் தமிழில் எழுதி இருந்தால் எப்படி எழுதி
இருப்பாரோ, அதுதான் இது. 
பதிப்புரிமை: இக்கட்டுரை ஆசிரியர்க்கு!
************************************************************************ 

     
   

  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக