வியாழன், 21 ஜூன், 2018

கலைஞர் திமுகவின் தலைவர் மட்டுமல்ல,
கோடிக்கணக்கான சூத்திர மக்களின் தலைவரும் கூட.
கலைஞரை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ
எழுதாமல் கடந்த  70 ஆண்டு கால தமிழக
வரலாற்றை எழுத முடியாது. ஆனால் ஜெயலலிதா
அப்படி அல்ல. அவர் ஒரு மூன்றாம் பிறையைப்
போல குறுகிய காலமே அரசியலில் இருந்து மறைந்து
விட்டவர்.

கலைஞர் என்னும் அடைமொழி திமுகவினரால்
மட்டும் சொல்லப் படுவதில்லை. மொத்தத் தமிழகமும்
அதைச் சொல்கிறது. அது போல மொத்தத் தமிழகமும்
ஏற்றுக்கொண்டு சொல்லக்கூடிய அடைமொழி
எதுவும் ஜெயலலிதா அவர்களுக்கு இல்லை.

இதுதான் நிலவரம். இதில் பாரபட்சம் எதுவும் இல்லை.

பின்குறிப்பு: மறைந்த எம்ஜியார் தன் இறுதி மூச்சு
நிற்கும்வரை கலைஞரை என்ன சொல்லி அழைத்தார்?
நண்பர் கலைஞர் கருணாநிதி என்றுதானே
அழைத்தார்! ஜெயலலிதாவிடம் உள்ள பார்ப்பனத்
திமிர் எம்ஜியாரிடம் கிடையாது. ஏனெனில்
எம்ஜியாரும் ஒரு சூத்திரர்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக