செவ்வாய், 12 ஜூன், 2018

அரசுப் பள்ளி மாணவர் இளைய பாரதி
ஜப்பான் பயணம்!
எல்லாச் செலவையும் அரசு ஏற்றது!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை
(science and technology dept) ஆண்டுதோறும் பள்ளி
மாணவர்களுக்காக அறிவியல் புத்தாக்க
விருதுகளுக்கான (INSPIRE Awards) தேர்வுகளை
நடத்தி வருகிறது.

இதில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்
ஜப்பானுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்
படுகின்றனர்.

இந்த ஆண்டு 3 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து
ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.
அவர்கள் வருமாறு:-

1) கே இளைய பாரதி X Std, அரசு உயர்நிலைப்பள்ளி,
இனாம் கிள்ளியூர், வலங்கைமான் பிளாக்,
திருவாரூர் மாவட்டம் 614208.

2) வடிவழகன், சிறுமலர் மேனிலைப்பள்ளி, கும்பகோணம்.

3) நிகில் எஸ் கெளஷிக், கே கே நகர், சென்னை.

இம்மூன்று மாணவர்களையும் ஜப்பான் சென்று
திரும்பினார். இவர்களை புதுடில்லி வரை
அழைத்துச் சென்றவர் டாக்டர் சௌரிராஜப் பெருமாள்,
பிர்லா கோளரங்க இயக்குனர்.

தகவல் "அறிவியல் ஒளி, ஜூன் 2018, பக்கம்-15.
மேல் விவரங்களுக்கு அறிவியல் ஒளி படிக்கவும்.

ஒரு கிராமப்புற அரசுப்பள்ளி மாணவன் இன்ஸ்பைர்
தேர்வில் வெற்றி பெற்று, அரசு செலவில் ஜப்பான்
சென்று வந்த செய்தி மகிழ்வைத் தருகிறது.
***********************************************      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக