திங்கள், 4 ஜூன், 2018

தூத்துக்குடியில் புற்றுநோய்க்கு யார் காரணம்?
காப்பரா? (அல்லது) டைட்டானியமா?
வைகுண்டராஜனின் ஆலைகள் ஏற்படுத்தும்
100 சத மாசு பற்றி யாரும் மூச்சு விடாதது ஏன்?
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
காப்பர் எனப்படும் தாமிரத்தின் அணு எண் 29.
நிச்சயமாக இது ஒரு கதிரியக்கத் தனிமம் அல்ல.
(Not a radioactive element). அணு எண் 82க்கு மேல் உள்ள
தனிமங்களே, அதாவது காரியத்துக்கு (Lead)
அப்பால் உள்ளவை கதிரியக்கத் தனிமங்கள் ஆகும்.
கதிரியக்கத் தனிமங்களால் புற்றுநோய் வரக்கூடும்
என்பது சமூகத்தின் பொதுக் கருத்து.

புற்றுநோய் ஒற்றைக் காரணியால் உண்டாகி
விடுவதில்லை. புற்றுநோய் ஒருவருக்கு வருவதற்கு
நிறையக் காரணிகள் உள்ளன. புற்றுநோயை
உண்டாக்கும் பொருட்களை அறிவியல்  வகைப்படுத்தி
பட்டியல் இட்டுள்ளது. இவை carcinogens என அழைக்கப்
படுகின்றன.

ஐநா சபையின் உலக சுகாதாரக் கழகம் (WHO)
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக ஒரு அமைப்பை
நடத்துகிறது.இந்த அமைப்பின் பெயர் IARC ஆகும்.
(IARC = International Agency for Research on Cancer). இந்த
அமைப்பின் ஆய்வறிக்கைப்படி, ஆர்செனிக்,
பெரில்லியம், காட்மியம், நிக்கல், ரேடான்,ரேடியம்
உள்ளிட்ட சில தனிமங்கள் பொதுவான புற்று ஊக்கிகள்
(carcinogens) என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இதில் காப்பர் இல்லை என்பது கவனத்துக்கு உரியது.

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் பிரித்தெடுக்கப்
படும்போது, கந்தகம், கந்தக டை ஆக்ஸைடு, பாஸ்வரம்,
பாஸ்வர ஆக்ஸைடு ஆகியவை வெளியேறுகின்றன.
இவற்றில் எதுவும் கார்சினோஜன் (carcinogen) இல்லை.
ஆனால், கூடவே வெளியேறும் ஆர்செனிக் ஒரு
பொதுவான கார்சினோஜென் ஆகும். அதாவது
புற்று நோயை உண்டாக்கும் காரணி ஆகும்.

இந்த ஆர்செனிக்கை முறையாகக் கையாளாவிட்டால்
அது புற்று நோயை உண்டாக்கும் என்பது உறுதி.
ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்த மட்டில், இந்த
ஆர்செனிக் மட்டுமே புற்றுநோய்க் காரணி ஆகும்.

தூத்துக்குடியில், முன்பு, அதாவது 20, 30 ஆண்டுகளுக்கு
முன்பு இல்லாத புற்றுநோய் தற்போது பரவலாக
உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது  மிகுந்த
அக்கறையுடன் ஆய்வு செய்யப்பட வேண்டியது.

தூத்துக்குடியில் திரு வைகுண்டராஜன் அவர்களின்
ரசாயன ஆலை உள்ளது. முன்பு Kilburn Chemicals என்ற
பெயரில் இயங்கிய இந்த ஆலை, தற்போது,
வி வி டைட்டானிக் பிக்மென்ட்ஸ் (V V Titanic Pigments Pvt Ltd)
என்ற பெயரில் இயங்கி வருகிறது.

தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கேரளக்
கடற்கரையில் உள்ள கடல் மணலில் (sea sand)
இலுமினைட் (Ilmenite FeTiO3) எனப்படும் இரும்பு
கலந்த டைட்டானியம் ஆக்ஸைடு என்னும்
கனிமம் (mineral) பெருமளவில் கிடைக்கிறது.
டைட்டானியம் என்னும் தனிமத்தின் அணு எண் 22.
இது பளபளப்பான வெண்ணிற உலோகம்.
(less mass and more strength).

டைட்டானியம் டை ஆக்ஸைடு (TiO2) ஒரு
கார்சினோஜென் என்று ஐரோப்பிய அமைப்பான
ECHA (European Chemicals Agency) அறிவித்துள்ளது.
(TiO2 is a category-two carcinogen). ஆக, வைகுண்ட ராஜனின்
வி வி மினரல்ஸ் குழுமம் நடத்தும் டைட்டானிக்
பிக்மென்ட்ஸ் ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தியே
புற்று நோய்க்கு காரணியான டைட்டானியம்
டை ஆக்சைடுதான்.

மேலும் இக்கடற்கரை மணலில் தோரியம் என்னும்
கதிரியக்கத் தனிமமும் கிடைக்கிறது. இதன்
சிதைவின்போது ஆல்பா பீட்டா காமா கதிர்வீச்சு
நிகழும்.

ஆக, ஸ்டெர்லைட்டில் குறைந்த அளவு வெளியாகும்
ஆர்செனிக், மற்றும் விவி மினரல்சின் ஒட்டு மொத்த
உற்பத்தியான டைட்டானியம் டை  ஆக்ஸைடு ஆகிய
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அப்படி ஒப்பிடும்போது, புற்று நோயை ஏற்படுத்தும்
காரணிகளை, வாய்ப்பை மிக அதிகம் கொண்டிருப்பது
வைகுண்ட ராஜனின் டைட்டானிக் பிக்மென்ட்ஸ்
ஆலையே என்பது புலப்படுகிறது. இது இக்கட்டுரையில்
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

இருப்பினும், வைகுண்டராஜனின் ஆலைகள்
ஏற்படுத்தும் மாசு பற்றி போலி முற்போக்குகள்,
போலி இடதுசாரிகள், சுற்றுச்சூழல் போலிகள்
என்று எவருமே அம்பலப் படுத்துவதில்லை.
இதற்கு இரண்டு காரணங்கள்:
1) வைகுண்டராஜனிடம் விலை போனது
2) வைகுண்டராஜன் மீதான பயம், அச்சம்,
தொடை நடுக்கம் ஆகியவை.

ஸ்டெர்லைட்டில் தாமிர உற்பத்தியின்போது
தவிர்க்க இயலாதபடி கார்சினோஜன் உண்டாகிறது.
வி வி மினரல்சில் உற்பத்தி செய்யப்படுவதே
கார்சினோஜன்தான். இந்த வேறுபாட்டை
உணர வேண்டும்.

டைட்டானியம் டை ஆக்சைடுக்கு பரவலான
பயன்கள் உண்டு. அவற்றில் ஒன்று உணவுப்
பொருட்களுக்கு வண்ணம் சேர்ப்பது. எனினும்
இதன் விளைவுகள் குறித்து மருந்தியல் (pharmaceutical)
துறை வல்லுனர்களிடம் விசாரிக்கவும்.
*******************************************************



 

         

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக