ஞாயிறு, 3 ஜூன், 2018

ஸ்டெர்லைட்டை விட அதிகம் மாசுபடுத்துவது
தாது மணல் அலைகளே!
---------------------------------------------------------------------------------
ஸ்டெர்லைட்டின் பாதிப்பு என்னவென்பது நேரில் கண்டதில்லை, பாதிக்கபட்டவர்களின் ஓலம் மட்டும் கேட்டது. சில நிபுணர்களின் ஆய்வுகள் ஸ்டெர்லைட் அபாயகரமானது என சொன்னபின் அது வெடித்தது
ஸ்டெர்லைட்டை விட ஆபத்தான விஷயம் தாதுமணல் தொழிற்சாலை, அதன் கழிவுகள் சூழலை மட்டுமல்ல கடலையே நாசபடுத்தியவை
அந்த வைகுண்டராஜனின் அரசாங்கள் தூத்துகுடிக்கு வடக்கே இருந்து கன்னியாகுமரி வரை ஆண்ட பொழுது கடலே சிகப்பு நிலத்தில் இருந்தது, அப்படி ஒரு கொடும் அழிவு எங்கும் சாத்தியமில்லை
மீணவர் தொழில் அழிந்தது, மீன் இனம் அழிந்தது, அவர்கள் கதறத்தான் செய்தார்கள் ஆனால் யார் காதிலும் விழவில்லை
மணலை அள்ளி கடற்கரையினை நாசபடுத்தியது, மணலை பிரிக்கின்றோம் என கடற்நீரை மாசுபடுத்தியது இதில் ஏகபட்ட ரசாயாணம் கலந்து மீன்பாடு, மீணவர் நலம் கெட்டது என ஏராளம்
குமரியும் நெல்லை கடற்கரையும் புற்றுநோயில் அகப்பட்டதற்கு இவை முதற்காரணம், இந்த மாசடைந்த கடல் மீன்களை உண்டவர் நிலை இன்னும் மோசம்
நிச்சயமாக சொல்லலாம் ஸ்டெர்லைட் குறிப்பிட்ட இடத்தை நாசபடுத்தியது, ஆனால் வைகுண்டராஜனின் ஆலைகளும், தயா தேவதாஸ் ஆலைகளும் அழித்த அழிவு கொஞ்சமல்ல‌.
********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக