வெள்ளி, 6 மே, 2016

அன்று நியூட்டன் அறிவியல் மன்றம் சொன்னது!
இன்று அதையே உச்ச நீதிமன்றம் சொல்கிறது!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
மே 1 அன்று நாடு முழுவதும் NEET-1 தேர்வு
நடைபெற்றது. ஆறு லட்சம் பேர் எழுதினர்.
தேர்வு நாளுக்கு 24 மணி நேரம் முன்பு வரை தேர்வு
நடக்குமா என்பது குறித்த ஒரு நிச்சயமின்மை
(UNCERTAINTY) நிலவியதால், போதிய தயாரிப்பு
இல்லாமலேயே தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள்
நிர்ப்பந்திக்கப் பட்டனர். இது அநீதியானது.

எனவே NEET -1 எழுதிய மாணவர்களில் விரும்பும்
அனைவரையும் ஜூலை 24 அன்று நடைபெறும் NEET-2
தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் கோரியிருந்தது. (பார்க்க: 02/05/2016
தேதியிட்ட பதிவு)

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஆங்கில
இந்து ஏட்டிலும்  (The Hindu dtd 03.05.2016) ஆசிரியருக்குக்
கடிதங்கள் பகுதியில் நியூட்டன் அறிவியல் மன்றம்
கடிதம் எழுதி இதேசத்தின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது நேற்றைய விசாரணையின் போது, (05.02.2016)
உச்சநீதிமன்ற நீதியரசர்கள் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் கருத்தை எதிரொலிக்கும் விதமாக,
NEET-1 எழுதிய மாணவர்களையும் NEET-2 தேர்வெழுத
அனுமதிப்பது குறித்து சாதகாமாக முடிவெடுக்குமாறு
மத்திய அரசு மற்றும் CBSE வழக்கறிஞர்களிடம்
கூறியுள்ளனர்.

இது சாத்தியமானதுதான், ஆனால் கடினமானது
(not impossible but difficult) என்று CBSE தரப்பில்
ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
பின்க்கி ஆனந்த் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
(தகவல் ஆதாரம்: The New Indian Express, 06.05.2016 பக்கம்-1)

மீண்டும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற
கோரிக்கையை  நியூட்டன் அறிவியல் மன்றம் தவிர
தமிழ்நாட்டில் வேறு எந்த அமைப்பும் எழுப்பவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது.

மாணவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின்
கவனத்திற்கு எடுத்துச் சென்றதில்  சிறப்பான
பங்கு வகித்தமைக்காக நியூட்டன் அறிவியல்
மன்றம் பெருமிதம் கொள்கிறது.
********************************************************************           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக