நாம் உண்ணும் உணவில் பிரதானமாக, கார்போ
ஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகியவை உள்ளன.
சித்த வைத்தியமானது பத்தியம் என்ற கட்டுப்பாட்டை
விதிக்கும். அல்லோபதியில் அந்த அளவுக்கு
கட்டுப்பாடு கிடையாது. எனினும், சர்க்கரை
நோயாளிகள் கார்போ ஹைட்ரேட்டை அதிக அளவு
உண்பதை, ரத்தக் கொதிப்பு (pressure) நோயாளிகள்
அதிக உப்பு உண்பதை அல்லோபதியும் தடை செய்யும்.
**
இன்றுள்ளது போல் உணவு பற்றிய ஆராய்ச்சி சித்த
வைத்தியம் தோன்றிய காலத்தில் கிடையாது. எனவே
அன்றைக்கு இருந்த குறைவான அறிவின் அடிப்படையில்
சித்த மருத்துவமானது உணவில் பல்வேறு கடுமையான
கட்டுப்பாடுகளை விதித்தது.
**
அல்லோபதி மருத்துவம் காலந்தோறும் வளர்ந்து வருவது.
இதில் பயன்படுத்தும் மருந்துகள் Evidence based medicine ஆகும்.
சித்த மருத்துவ காலத்தை விட, இன்று உணவு பற்றிய
ஆராய்ச்சி மிகப்பெருமளவுக்கு மேம்பட்டுள்ளது.
இந்த மேம்பட்ட அறிவின் அடிப்படையில் அல்லோபதி
மருத்துவம், சித்த மருத்துவம் கூறும் பல்வேறு
உணவுக் கட்டுப்பாடுகளை (பத்தியம்) தேவையற்றது
என்று கருதுகிறது.
**
சித்த மருத்துவத்தின் கண்மூடித்தனமான
கட்டுப்பாடுகளுக்கு காரணம் வளர்ச்சியடையாத அறிவு.
அல்லோபதி மருத்துவத்தின் மிகக் குறைவான
கட்டுப்பாடுகளுக்குக் காரணம் மேம்பட்ட அறிவு.
அவ்வளவே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக