இதனால் சகலமானவர்களுக்கும்
தெரிவிப்பது என்னவென்றால்........
நுழைவுத் தேர்வும் சமச்சீர் கல்வியும்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

"தமிழ்நாட்டு மாணவர்களால் அண்மையில் நடந்த
மருத்துவப் பொது நுழைவுத் தேர்வை (NEET) சரிவர
எதிர்கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணம்
தமிழ்நாட்டில் உள்ள சமச்சீர் கல்வி முறைதான்".
சாராயக் கடைகள் முதல் கட்டணக் கழிப்பிடம்
வரை திரண்டு நிற்கும் கருத்துச் செறிவு மிக்க
கருத்துச்சொல்லிகள் பலரும் ஒருமித்த குரலில்
சொல்லி வரும் கருத்து இதுதான்.
இது உண்மையா? சமச்சீர் கல்வியில்தான் குறையா?
பார்ப்போம்.
1) மருத்துவ நுழைவுத் தேர்வை 12ஆம் வகுப்பு
தேறியவர்கள் மட்டுமே எழுத முடியும் என்பதை
கருத்துச் சொல்லிகள் முதலில் தெரிந்து கொள்ள
வேண்டும்.
2) அடுத்து, தமிழ்நாட்டில் 11, 12 வகுப்புகளில், அதாவது
பிளஸ் டூ வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை கிடையாது
என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆம், தமிழ்நாட்டில் 1 முதல் 10 வகுப்புகள் வரை
மட்டுமே சமச்சீர் கல்வி முறை செயல்பாட்டில்
உள்ளது. இதைக் கொண்டு வந்ததற்கே கலைஞரை
உண்டு இல்லை என்று பண்ணி விட்டார் ஜெயலலிதா.
11, 12 வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி முறையைக்
கொண்டு வந்திருந்தால், கலைஞரை அடித்தே
கொன்றிருப்பார்கள் சமச்சீர் கல்வி எதிர்ப்பாளர்கள்.
அப்படியானால், தமிழ்நாட்டில் 11, 12 வகுப்புகளில்
என்ன பாடமுறை அல்லது பாடத்திட்டம் இருக்கிறது?
அதன் பெயர் என்ன? தமிழ்நாடு மாநிலப்
பாடத்திட்டம்தான் (Tamilnadu State Board syllabus) 11, 12
வகுப்புகளில் செயல்பாட்டில் உள்ளது.
இது மிகப் பழைய பாடத்திட்டம். காலத்திற்கு
ஏற்றவாறு புதுப்பிக்கப் படாத, தரம் உயர்த்தப்
படாத பாடத்திட்டம். CBSE பாடத்திட்டத்துடன் இதை
ஒப்பிடுவது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக்
கட்சியை, அதிமுகவுடன் ஒப்பிடுவது போல் ஆகும்.
கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வி உண்மையில்
CBSE பாணி பாடத்திட்டத்தை அடிப்படையாகக்
கொண்டதாகும். CBSE பாடங்களும் கேள்வித் தாட்களும்
அ) knowledge ஆ)understanding இ) application ஈ) skill
ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டிருக்கும்.
சமச்சீர் கல்வியின் பாடத்திட்டமும் இது போலவே
மேற்கூறிய நான்கு அம்சங்களையும் கொண்டதாக
கலைஞர் வடிவமைத்தார்.
சுருங்கக் கூறின், சமச்சீர் கல்வியின் மூலம், பத்தாம்
வகுப்பு வரையிலான பள்ளிப் பாடத்திட்டத்தை
CBSE தரத்துக்குச் சமமாக இல்லாவிடினும், அதை
ஒட்டி வடிவமைத்தவர் கலைஞர். பொதுப்பாடத்
திட்டம், பொதுப்பாட நூல்கள் வாயிலாக, நடப்பில்
இருந்த பள்ளிக் கல்வியை பெருமளவுக்கு
மேம்படுத்தினார்.
11, 12 வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி வந்திருக்கும்
என்றால், தமிழக மாணவர்களால் மருத்துவப்
பொது நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது
ஓரளவு சுலபமாக இருந்திருக்கும்.
ஆக, சமச்சீர் கல்வியினால் அல்ல, சமச்சீர் கல்வி
இல்லாமல் போனதாலேயே NEET தேர்வை நம்மால்
சரிவர எதிர்கொள்ள முடியவில்லை என்பது
இதன் மூலம் நிரூபிக்கப் பட்டு இருக்கிறது. QED.
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக