திங்கள், 2 மே, 2016

நுழைவுத் தேர்வு வரலாற்றின் முதல் அத்தியாயம்!
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------------
மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்)
குறித்துப் பலரும் கருத்துச் சொல்லி வருகிறார்கள்.
இந்த விஷயத்தில் அக்கறை செலுத்துகிறார்கள் என்ற
அளவில் இது வரவேற்கத்தக்கதே. ஏனெனில்,
முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் சமூகத்தின்
கவனத்தை  ஈர்க்க இயலாமலேயே இறந்து விடுகின்றன
தமிழ்நாட்டில்.

எனவே அடிமுட்டாள்தனமான கருத்தை
நுழைவுத் தேர்வு குறித்து ஒருவர் சொன்னாலும்,
அவரைக் கண்டிப்பதற்குப் பதிலாக பாராட்டித்
தொலைக்க வேண்டிய சூழலில்தான் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.

சில ஆயிரம் MBBS இடங்களுக்குப் பல லட்சம் பேர்
போட்டியிடும் சூழலில், இந்தப் போட்டியை
முறைப்படுத்தவும், இதில் வெளிப்படைத் தன்மை
(transparency) இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்,
இதில் ஊழல், nepotism, favouritism  ஆகியவை இல்லாமல்
உறுதி செய்யவும் ஒரு ஏற்பாடு தேவைப் படுகிறது.
**
இந்தத் தேவையை நுழைவுத் தேர்வு
நிறைவேற்றுகிறது என்ற அடிப்படையில்தான்
எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில் 1980களில்
நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது.
**
அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக
இருந்த ஹெச் வி ஹண்டே மருத்துவப் படிப்பு
இடங்களை லட்சம் ரூபாய்க்கு விற்கிறார் என்று
எழுந்த புகார்களின் அடிப்படையில், அதை
முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு எம்.ஜி.ஆர்
நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார்.
**
அதற்கு முன்பு நேர்காணல் (interview) அடிப்படையில்
மருத்துவப் படிப்பு இடங்கள் ஒதுக்கப் பட்டன.
MBBS இடங்களுக்கான நேர்காணல் நடந்து
கொண்டிருக்கும். ஏதேனும் ஒரு டீன் (Dean = மருத்துவக்
கல்லூரி முதல்வர்) நேர்காணலை நடத்திக் கொண்டு
இருப்பார். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி
அழைப்பு வரும், அமைச்சரிடம் இருந்து. "சார், சுரேஷ்
குமார்னு ஒரு பையன் இன்னிக்கு இண்டர்வியூவுக்கு
வர்றான். அவன் நமக்கு வேண்டிய பையன். நீங்க
இன்டெர்வியூவிலே அவனுக்கு 10க்கு 9 மார்க் போட்டு
செலெக்ட் பண்ணிடுங்க". அதன் பிறகு டீன்
அந்தப் பையனுக்கு சீட் கொடுத்து விடுவார்.
பையனின் தந்தை அமைச்சரிடம் இரண்டு லட்சம்
ரூபாயை கொடுத்திருப்பார்.
**
இப்படித்தான் MBBS படிப்புக்கு மாணவர்கள்
சேர்க்கப் பட்டார்கள். இதை மாற்றியது
நுழைவுத் தேர்வு.

நுழைவுத் தேர்வின் வரலாற்றில் முதல் அத்தியாயம்
இதுதான். இன்னும் பல அத்தியாயங்கள் உள்ளன.
அவற்றைப் பிறகு பார்ப்போம்.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக