திங்கள், 2 மே, 2016

நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களுக்கு
ஒரே பொதுத் தேர்வு நடத்துவது என்ற முடிவு காங்கிரஸ்
ஆட்சிக் காலத்தில் (UPA-II, 2009-2014) எடுக்கப் பட்டது.
டாக்டர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத்
எடுத்த முடிவு இது.
**
பதவியேற்ற முதல் ஆண்டிலேயே, வணிக மயமாகிப்
போன மருத்துவக் கல்வியை மீட்டெடுத்து, மருத்துவக்
கல்வியின் தரத்தைப் பேண  உறுதி பூண்டார் குலாம்
நபி ஆசாத். அதற்காக NEET எனப்படும் பொது நுழைவுத்
தேர்வை முன்மொழிந்தார்.
**
இதற்கான அறிவிக்கை டிசம்பர் 21, 2010இல் மருத்துவக்
கவுன்சிலால் (MCI) வெளியிடப்பட்டது. இதுதான் மூல
ஆவணம். நன்கு கவனிக்கவும்: இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்ட   ஆண்டு 2010, காங்கிரஸ்
ஆட்சியின்போது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு,
தற்போது, 2016 ஏப்ரலில் இந்த மூல ஆவணம்
செல்லும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.
**
சுயநிதிக் கொள்ளையர்களின் மண்டையில் ஓங்கி
அடிக்கும் இந்த பொது நுழைவுத் தேர்வு குலாம் நபி
ஆசாத் அவர்களின் மூளையில் உதித்த திட்டம்
ஆகும்.  ஆசாத்-மன்மோகன்-சோனியா ஆகிய
இம்மூவரும் இந்துத்துவவாதிகள் அல்ல. இவர்கள்
சமூகநீதிக்கு எதிரானவர்களும் அல்ல. குலாம் நபி
ஆசாத் சமூகநீதிக்கு எதிராகவே பொது நுழைவுத்
தேர்வைக் கொண்டு வந்தார் என்று எவரும் சொல்ல
முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக