புதன், 4 மே, 2016

It depends என்பதன் பொருள் கடவுள் இல்லை என்பதே
என்ற கருத்தை ஆழ்ந்த தர்க்கத்துடன்
வெளிப்படுத்தியமைக்கு நன்றி. எனினும்
கடவுள் இல்லை என்று சுஜாதா கருதி இருப்பரேயானால்,
அவர் தெளிவாக இல்லை என்றே சொல்லி இருப்பார்.
நூலின் ஆரம்பத்திலேயே இந்தக் கேள்விக்கு
உண்டு என்றோ இல்லை என்றோ பைனரியாக
பதில் சொல்லி விட முடியாது என்பார் சுஜாதா.
**
quantum superposition  என்ற கோட்பாட்டில் ஒரே நேரத்தில்
உண்டு என்பதும் இல்லை என்பதும் இருக்க முடியும்.
இதை விளக்க ஷ்ராடிங்கரின் பூனை பற்றியும்
அந்த நூலில் குறிப்பிடுவார் சுஜாதா. எனவே
it depends என்பதன் பொருள் (1) கடவுள் இருக்கிறார்
(2) கடவுள் இல்லை என்ற இரண்டு நிலைகளின்
quantum superimpositionதான். அதைத்தான் சுஜாதா
சொல்கிறார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக