கடவுள் இருக்கிறாரா?
தமிழ்ச் சூழலில் இக்கேள்வி சுஜாதாவுக்கு முன்
அறிவியல் ரீதியாக அணுகப்பட்டு இருக்கிறதா?
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா "கடவுள் இருக்கிறாரா?"
என்று ஒரு புத்தகம் எழுதினார். கடவுளைப் பற்றிய
அறிவியல் ரீதியான ஒரு சுத்தமான விசாரணை அது.
(A pure scientific investigation on God).
சுஜாதாவுக்கு முன் இந்தக்கேள்வி தமிழ் வாசக உலகில்
அறிவியல் ரீதியாக எவராலும் கையாளப் படவில்லை.
(இதை மறுப்பவர்கள் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க
வேண்டும்)
சுஜாதா வெகுஜனத் தளத்து வாசகர்களுக்காக இதை
எழுதிய காரணத்தால், தமிழக வெகுஜனத் தளத்துக்கே
உரிய குறுகிய வரம்புகளுக்குள் இந்த நூல் சிறைப்
பட்டு விட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், வெகுஜனத் தளத்தின் வாசகர்களுக்கு
என்று எழுதியதால் மிகவும் பரந்துபட்ட எண்ணிக்கையில்
ஆகப்பெரிய (பலப்பல மில்லியன்) வாசகர்களைச்
சென்றடைந்தது என்பதும் கருதத் தக்கது.
நூலின் தொடக்கத்திலேயே, கடவுள் இருக்கிறாரா
என்ற கேள்விக்கு உண்டு என்றோ இல்லை என்றோ
பைனரியாக பதில் கூறி விட முடியாது என்பார் சுஜாதா.
நூலின் இறுதியில், "கடவுள் இருக்கிறாரா என்ற
கேள்விக்கு என் பதில்: It depends" என்று பதில் கூறி
நூலை முடித்து இருப்பார்.
குவான்டம் தியரியை வெகுஜன வாசக வரம்புக்குள்
நின்றபடியே அலசும் சுஜாதா, குவான்டம்
இயற்பியலாளர் ஸ்ராடிங்கரின் பூனை (Scrodinger's cat)
என்ற கதை வடிவிலான கோட்பாட்டை விரிவாக
விளக்குவார்.
"It depends" என்ற தொடருக்கு பல்வேறு விதத்தில் பொருள்
கொள்ள முடியும் என்றாலும், கடவுள் இருக்கிறார்
என்று திட்டவட்டமாகப் பொருள் அல்ல. மேலும்
இதன் பொருள் என்னவென்றால், கடவுள் இருக்கிறார்
என்பதற்கு அறிவியலில் ஏற்கத்தக்க நிரூபணம்
இல்லை என்பதுதான்.
ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில்
இருக்க முடியும் என்கிறது குவாண்டம் தியரி.
மேலும் ஸ்ராடிங்கரின் பூனை விஷயத்தில்,
ஒரே நேரத்தில் பூனை உயிருடனும் இருக்கிறது,
இறந்தும் விட்டது என்கிறது குவான்டம் தியரி.
quantum superimposition என்ற கோட்பாட்டின்படி,
ஒரே நேரத்தில் ON, OFF என்கிற இரண்டு (முரண்பட்ட)
நிலைகளிலும் ஒரு சர்க்யூட் இருக்க முடியும்.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான்
குவான்டம் கணினி உருவாக்கப்பட்டு வருகிறது.
ஆக, It depends என்ற தொடரின் மூலம், quantum superimposition
கோட்பாட்டையே சுஜாதா வலியுறுத்துகிறார் என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் கருதுகிறது.
கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு நியூட்டன்
அறிவியல் மன்றத்தின் பதில் என்ன?
இல்லை என்பதே. இதை நியூட்டன் அறிவியல்
மன்றம் நிரூபித்து இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------
பி.கு: காத்திரமான கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.
********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக