திங்கள், 2 மே, 2016

திருவுளச் சீட்டு மூலம் மருத்துவப் படிப்பு
இடங்களை (MBBS) நிரப்பும் தமிழ்நாடு!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
2007 முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது.
நல்லது. அப்படியானால் MBBS இடங்கள் எப்படி
நிரப்பப் படுகின்றன?

வேறு எப்படி? திருவுளச் சீட்டு மூலமாகத்தான்!
விண்ணப்பித்த மாணவர்களின் பெயரை
துண்டுச் சீட்டுகளில் எழுதி, இஷ்ட தெய்வத்தை
வணங்கி, கள்ளங்கபடு இல்லாத சிறு குழந்தையை
விட்டு சீட்டை எடுக்கச் சொல்லி, அந்தக் குழந்தை
எடுத்த சீட்டில் யார் பெயர் வருகிறதோ அவருக்கு
அந்த MBBS இடத்தை வழங்குவது என்பதுதான்
திருவுளச் சீட்டு முறை.

இந்த முறையில்தான் தமிழக மருத்துவக் கல்லூரிகளில்
MBBS இடங்கள் நிரப்பப் படுகின்றன என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.

இதை மறுப்பவர்கள் நியூட்டன் அறிவியல் மன்றம்
கூறுவது தவறு என்று நிரூபிக்க வேண்டும்.

இதை எவராலும் மறுக்க முடியாது என்று அடித்துக்
கூறுகிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.
*******************************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக