ஞாயிறு, 1 மே, 2016

நுழைவுத் தேர்வு நடைபெற்றது!
இனிதே முடிவுற்றது!!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட எல்லா
இடங்களிலும் மே 1, 2016 நுழைவுத் தேர்வு
(NEET phase-I, erstwhile AIPMT 2016) நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் ஒரே தேர்வு மையமான சென்னையிலும்
இத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.

கேள்வித்தாள் பொதுவாக எளிமையாக இருந்தது
என்றும் இயற்பியல் பகுதி மட்டும் கடினமாக
இருந்தது என்றும் மாணவர்கள் கருதுவதாக
முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேள்வித்தாள் கிடைக்கப்பெற்ற பின்னரே இது
பற்றிக் கருத்துக்கூற இயலும்.

மிக முக்கியமான கோரிக்கை
----------------------------------------------------------
மே 1 தேர்வு எழுதியவர்கள் அடுத்து வரும் ஜூலை 24
தேர்வை எழுத முடியாது என்பது பெரும் அநீதி.
எனவே, விரும்பும் எவரும் ஜூலை 24 தேர்வை
எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.

இன்று தேர்வு எழுதிய 6.5 லட்சம் பேரும் மீண்டும்
ஜூலை 24 தேர்வை எழுத விரும்பினாலும் அவர்கள்
அத்தனை பேரையும் அனுமதித்துத்தான்
ஆக வேண்டும்.

இதுவே நியூட்டன் அறிவியல் மன்றத்தின் நிலைப்பாடு.
********************************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக