சனி, 30 ஏப்ரல், 2016

மேதினத்தன்று நுழைவுத் தேர்வு!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
மே 1 அன்று திட்டமிட்டபடி NEET முதல் கட்டத்
தேர்வு நடைபெறும் என்றும் அதைத் தள்ளி வைக்க
முடியாது என்றும் இன்று சனிக்கிழமை (30.04.2016)
காலை 12 மணியளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர்,
ஏ.கே சிக்ரி, ஆர் பானுமதி ஆகியோர் அடங்கிய மூவர்
அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.

எனவே நாடு முழுவதும் திட்டமிட்டபடி, மே 1, 2016
அன்று காலை 10 மணிக்கு NEET தேர்வு நடைபெறுகிறது.
மொத்தம் 6,67,637 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர்.

தமிழ்நாட்டிலும் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தத்
தமிழ்நாட்டுக்கும் ஒரே மையம்தான். அது சென்னைதான்.
சற்றேறக்குறைய 29,000 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட AIPMT 2016 தேர்வுதான்
NEET என்ற பெயரில் நடக்கிறது.

தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி
வழக்குத் தொடுத்தவர்கள் மகாராஷ்டிர மாநிலத்து
மாணவர்கள்.

நமது கருத்து:
--------------------------
மே 1 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். இரண்டு கட்டத்
தேர்வு என்பது அபத்தம். ஜூலை 24 தேர்வை விரும்பும்
அனைவரும் எழுத அனுமதிக்கப் பட வேண்டும்.
நாளை நடக்கும் முதல் கட்டத் தேர்வு உச்சநீதி மன்றம்
விரும்பியபடி நடக்கட்டும். ஆனால் பின்னர் இத்தேர்வு
ரத்து செய்யப்பட்டே ஆக வேண்டும்.
******************************************************************மே   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக