வியாழன், 14 ஏப்ரல், 2016

கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம்!
--------------------------------------------------------------
சூரியன், சந்திரன் ஆகியவை மனித முயற்சியால்
கட்டுப்படுத்த இயலாதவை. பூமியில், அதாவது பூமியின்
மேற்பரப்பில் மனிதன் வாழ்கிறான். அவனால் பூமியைக்
கெடுக்க முடியும். அவ்வளவுதான்.
**
51 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பு உடையது நாம்
வாழும் பூமி. இதில் சங்க காலத் தமிழகம் என்பது
அதிகபட்சம் 2,00,000 (இரண்டு லட்சம்) சதுர கிலோமீட்டர்
இருந்திருக்கக் கூடும்.
**
பூமியின் நிறை (mass) 6x 10^ 24 கிலோகிராம்.
( 6 multiplied by 10 to the power of 24) இதைத் தமிழில்
சொல்லவே முடியாது. தமிழில் சொல் கிடையாது.
ஆக, இவ்வளவு பிரும்மாண்டமான பூமியை, தமிழ்
நாட்டில் இருந்து கொண்டு கரிகால் பெருவளத்தான்
திருத்தினான்; அதன் மூலம் பூமியின் சுழற்சியை மாற்றி
அமைத்தான் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பிற்போக்குத்
தனம் ஆகும்: முற்றிலும் அறிவியலுக்கு எதிரானது ஆகும்.
**
உருத்திரங்கண்ணனாரின் உயர்வு நவிற்சியைப் புரிந்து
கொள்ளாமல், சூரிய சந்திரனை பூமியை கரிகாலன்
கட்டுப் படுத்தினான் என்பது இழிவான அபத்தம்.
**
சாதாரண மக்கள் இந்த அபத்தத்தைப் புரிந்து கொள்ளக்
கூடாது என்பதற்காக, திணைத்திரிபு, திணைத்திருத்தம்
என்றெல்லாம் மூடத்தனமான சொற்களைப் பெய்து
மக்களை ஏமாற்றுவது மேலும் அநீதி.          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக