செவ்வாய், 26 ஏப்ரல், 2016

தீர்ப்புகளில் அத்துமீறும் நீதிபதிகள்!
-------------------------------------------------------------------
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி
திரு மகாதேவன் அண்மையில் ஒரு வழக்கில்
தீர்ப்புக் கூறியபோது, திருக்குறளை பள்ளிகளில்
கண்டிப்பாகக் கற்பிக்க வேண்டும் என்று
உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெறும் மனப்பாடப் பகுதியாக மட்டுமின்றி,
ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
 திருக்குறளை விளக்கத்துடன் கற்பிக்க வேண்டும்
என்று அவர் உத்தரவில் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் காலங்காலமாக  ஆறாம் வகுப்பில்
இருந்து மட்டுமல்ல, இன்னும் கீழ் வகுப்புகளில்
இருந்து திருக்குறள், விளக்கத்துடன் கற்பிக்கப்
பட்டு வருகிறது. வெறும் மனப்பாடப் பகுதியாக
மட்டுமல்ல. நீதிபதி இதை அறியாமல் இருக்கக் கூடும்.

நீதிபதி அவர்கள் திருப்தி அடையும் அளவுக்கு,
திருக்குறள் பாடப்பகுதியில் இல்லை என்றே
வைத்துக் கொள்வோம். அப்போதும்கூட,
பாடப் பகுதியில் எதைஎல்லாம்  வைக்க வேண்டும்
என்று அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பது நீதிபதியின்
வேலை அல்ல. இந்த உத்தரவு மேதகு நீதிபதியின்
அத்துமீறல் ஆகும்.

பாடத்திட்டங்களை உருவாக்குவது கல்வியாளர்களின்
கடமை. அதற்கென நியமிக்கப்பட்ட வல்லுனர்களைக்
கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில்,
பாடத்திட்டம் (சிலபஸ்) உருவாக்கப் படுகிறது.
இதில் அதைச் சேர், இதைச் சேர்க்காதே என்று
உத்தரவு போடுவது நிச்சயம் அத்துமீறல் ஆகும்.

இந்திய நீதித்துறையின் சாபக்கேடு என்னவெனில்,
சமூகத்தின் தரக்குறைவான ஆற்றல்களே
(substandard talents) நீதித்துறைக்கு வந்து சேர்கின்றன.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும், அறிவுக்கூர்மை
மிக்க மாணவர்கள், IQ அதிகமான மாணவர்கள்
பொறியியல் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து
விடுகிறார்கள். அடிப்படை அறிவியலில் ஆர்வமுள்ள
மாணவர்கள் B.Sc படிப்பில் சேர்ந்து விடுகிறார்கள்.

கணக்கு வராது, சயன்ஸ் வராது, என்னால் Labஇல்
நிற்க முடியாது, மலைமலையாக ரெகார்டு நோட்டு
எழுத முடியாது என்ற நிலையில் உள்ள IQ குறைந்த
மாணவர்களே சட்டம் பயில்கிறார்கள். நீதிபதியாக
வருகிறார்கள். இதுதான் உண்மை.

எனவே இவ்வாறு நீதித்துறைக்கு வரும் IQ குறைந்த
நீதிபதிகள், மாணவர்களின் கல்வியில், பாடத்
திட்டத்தில் அத்துமீறித் தலையிடுவது மூடத்தனம்
மட்டுமல்ல வன்மையான கண்டனத்துக்கு
உரியதும் ஆகும்.

இதைப் படித்ததும் எந்த நீதிபதிக்காவது ரோஷம்
பொத்துக் கொண்டு வந்தால், அவர் இந்தக்
கட்டுரையின் ஆசிரியரோடு IQ TESTக்கு வரலாம்.
-------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: திருக்குறள் நீதிபதிகளின் தயவில்
உயிர் வாழவில்லை.
*************************************************************           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக