கலப்புத் திருமணம் செய்தால் ரூ 60,000 பரிசு என்னும்
கலைஞரின் தேர்தல் அறிக்கையும்
பிற்போக்குப் பிண்டங்களின் கடும் எதிர்ப்பும்!
-----------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்

சாதி மறுப்புத் திருமணம் செய்தால் ரூ 60,000 பரிசு என்ற
அறிவிப்பு தமிழ்நாட்டின் பிற்போக்குப் பிண்டங்களுக்கு
ஏற்புடையதாக இல்லை.
"இடதுசாரிகள்", "முற்போக்காளர்கள்", "புரட்சிகர"
ஆசாமிகள்என்று பலர் இருந்தும் ஒரு பயல் கூட
கலைஞரின் இந்த அறிவிப்பை வரவேற்கவில்லை.
ஏன்? ஏனெனில் தமிழ்நாட்டில் முற்போக்கு-இடதுசாரி-புரட்சி
இவற்றுக்கெல்லாம் மொத்தக் குத்தகை எடுத்திருக்கும்
ஆட்களில் 99.99 சதம் பேர் ஆஷாடபூதிகள். அதாவது போலிகள்.
சாதிப்பிடிப்பு உள்ள பயல்கள்.
பிற்போக்குப் பிண்டம் நேரடியாக இதை எதிர்ப்பான்.
முற்போக்கு முண்டமோ மறைமுகமாக இதை
எதிர்ப்பான்.
ஒட்டு மொத்தத்தில் முற்போக்கு பிற்போக்கு இரண்டு
பயல்களும் கலைஞரின் இந்த அறிவிப்பை
விரும்பவில்லை. இதுதான் கள நிலவரம்.
பக்குவமடையாத தமிழ்ச் சமூகத்திற்கு இது போன்ற
திட்டங்கள் தேவையில்லை என்கிறார்கள் சமூகவியல்
அறிஞர்கள். பெற்றோர்களிடம் தேவையற்ற ஒரு பதற்றத்தை
உருவாக்குவது தவிர இந்த அறிவிப்பால் ஆதாயம் எதுவும்
இல்லை. கலைஞர் எப்போதுமே காலத்தை மீறிச்
சிந்திக்கிறார். Kalaingar thinks ahead of times. இது வாக்குகளைப்
பெற்றுத் தருமா?
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைச் செயல்படுத்த முடிந்த
ஒரு சமூக அமைப்பில் மட்டுமே இந்த அறிவிப்புகள்
பலன் தரும். அரை நிலப்பிரபுத்துவ சாதிய அமைப்பில்,
குட்டி முதலாளித்துவப் போலி முற்போக்குகளை நம்பி
வெளியிட்ட இது போன்ற அறிவிப்புகளை கலைஞர்
தவிர்த்து இருக்கலாமே என்கின்றனர் சமூகவியல் அறிஞர்கள்.
அறிவார்ந்த காத்திரமான சிந்தனை படைத்தோரின்
கருத்துகள் வரவேற்கப் படுகின்றன. லாவணி தேவையில்லை.
---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக