புதன், 27 ஏப்ரல், 2016

கனிகொள் என்பது பலனைப் பெறு என்று பொருள் தரும்.
பாடுபடு, பாடுபட்டு அதன் பலனைப் பெறு என்பது
மட்டுமே பாரதி கூறியது.  

அடையாள அரசியல் மிகவும்
வெளிப்படையாகக் கொடிகட்டிப் பறக்கும் ஒரு
சமூகத்தில், சாதி மதம் போன்ற அடையாளங்கள்
ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை  நிர்ணயிப்பதில்
குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கின்றன. என்றாலும்,
ஒரு கட்சியின் அல்லது ஒரு வேட்பாளரின் வெற்றி என்பது
சாதி என்னும் ஒற்றைக் காரணியை மட்டும்
சார்ந்தது அல்ல. பல்வேறு காரணிகளின் கூட்டின்
விளைவாகவே ஒரு வேட்பாளர் வெற்றி பெற இயலும்.

சாதி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றுபடுத்தும்
காரணியாக (unifying factor) இருப்பதால், கட்சிகளால்
அது தேவையான அளவுக்குப் பயன்படுத்தப்
படுகிறது. மேலும் ஒரு சாதிய சமூகத்தில்,
சாதியைப் பொருட்படுத்தாமல் எவரும் செயல்பட்டு
விட முடியாது. அவ்வாறு கூறுவது, பூனை கண்ணை
மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடும்
என்பது போன்ற கற்பனை ஆகும்.

என்னதான் எதிர்த்தாலும் அல்லது புறக்கணித்தாலும்
சாதியானது தன்னுடைய பாத்திரத்தை வகித்தே தீரும்.
சாதி எதிர்ப்பாளர்களால் அதிகபட்சம் என்ன செய்யக்
கூடும் என்றால், தனது வரம்பை மீறி சாதியானது
முக்கியத்துவம் பெற்று விடாமல் பார்த்துக் கொள்ள
முடியும். அவ்வளவே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக