திங்கள், 25 ஏப்ரல், 2016

போர் தொடங்கியதுமே தோல்வியை ஒப்புக்கொண்டு
ஆயுதங்களைக் தூர எறிந்து சரணடைந்த வைகோ!
----------------------------------------------------------------------------------------------------
வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில்
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை
என்று அறிவித்துள்ளார் வைகோ.

தோல்வி கண்முன்னே தெரிவதை உணர்ந்த வைகோ
போட்டியிட்டுத் தோல்வி அடைந்தால், தம்முடைய
எதிர்காலமும் கட்சியின் எதிர்காலமும் நிரந்தரமாக
இருண்டு விடும் என்பதால்  போட்டியிடவே
முன்வராமல்,  சரணடைந்து விட்டார் வைகோ.

படுகளத்தில் ஒப்பாரி வைக்கும் வைகோ, நெஞ்சுரம்
இல்லாமல் கடைந்தெடுத்த கோழைத்தனத்தை
வெளிப்படுத்தி உள்ளார். ஒரு உக்கிரமான போர்
தொடங்கும்போது, போரின் முதல் நாளிலேயே
தலைமைத் தளபதி சரண் அடைகிறார் என்பது
அவர் தலைமை ஏற்கும் கூட்டணி தோல்வி
அடையப் போகிறது என்பதற்குக் கட்டியம் கூறுகிறது.

அவரின் இந்த முடிவால் விஜயகாந்த்தும் பிரேமலதாவும்
பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இவரை நம்பி
இருக்கிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்
நட்டாற்றில் கைவிடும் இவரை நம்பிக் களத்தில்
இறங்கினோமே என்று தலையில் அடித்துக்
கொள்கின்றனர்.

வைகோவின் இந்தக் கோழைத்தனமான முடிவை
அவரின் கூட்டணியில் உள்ள தலைவர்களே 
ஏற்கவில்லை. இது அக்கூட்டணியின் தேர்தல்
வாய்ப்புகளுக்குப்  பெரிதும் சேதாரத்தை
விளைவித்து விடும்  என்று அஞ்சுவதால்,
விசிக தலைவர் திருமாவளவனும், மார்க்சிஸ்ட்
கட்சி டி.கே.ரங்கராஜனும், வைகோ தமது
முடிவை மறுபரிசீலனை செய்து மீண்டும்
கோவில்பட்டியில் போட்டியிட வேண்டும் என்று
தந்தி தொலைக்காட்சியில் கருத்துக் கூறி
உள்ளனர்.

தேமுதிக மநகூ கூட்டணியின் தொண்டர்கள்
ஆதரவாளர்களை  வைகோவின் முடிவு
கடுமையாகச் சோர்வடையைச் செய்து விடும்
என்பது உண்மை. ஆக  தேர்தலின்
தொடக்கத்திலேயே தோல்வியை ஒப்புக்
கொண்டு விட்டது மக்கள் நலக் கூட்டணி.
************************************************************ 
      



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக