வியாழன், 21 ஏப்ரல், 2016

மார்க்சியம் மக்களின் ஆயுதம் தாங்கிய புரட்சியின்
வாயிலாக அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும்,
கைப்பற்றியபின் சோஷலிசத்தைக் கட்டுவதையும்
பற்றிக் கூறும் ஒரு தத்துவம். இந்தியாவில் நக்சல்பாரியில்
விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய எழுச்சியுடன்
மார்க்சிய லெனினியம் பிறக்கிறது. மா-லெ கட்சி
உதயமாகிறது.
**
வலது இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் போலிக் கம்யூனிஸ்ட்
கட்சிகள் என்று நக்சல்பாரி இயக்கத்தால் அடையாளம்
காணப்பட்டு மக்களுக்குச் சொல்லப் படுகின்றன.
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஒரு சில
சீட்டுக்களுக்காக கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன்,
ஜெயலலிதா, விஜயகாந்த் என்று பல்லக்குத் தூக்குவதையே
குலத் தொழிலாகக் கொண்ட போலிக் கம்யூனிஸ்ட்களான
CPI,CPM கட்சியினர் மார்க்சியம் பற்றிப் பேசுவதற்கான
அருகதையை என்றோ இழந்து விட்டனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக