வெள்ளி, 22 ஏப்ரல், 2016

இடதுசாரித் தொழிற்சங்கவாதியான ஜெயமோகன்!
-----------------------------------------------------------------------------------
ஜெயமோகன் எங்கள் நண்பர்; எங்கள் தோழர்.
மத்திய அரசின் தொலைதொடர்புத் துறையிலும்
அதன் பின்  BSNL நிறுவனத்திலும் நாங்களெல்லாம்
ஒன்றாகப் பணியாற்றினோம். அவர் எழுதிய முதல்
புத்தகத்தை எங்கள் தொழிற்சங்கத் தலைவர்
தோழர் ஜெகன்னாதன் (NFTE சம்மேளனச் செயலாளர்
மற்றும் AITUC உயர்மட்டக்குழு உறுப்பினர்)
அவர்கள்தான் வெளியிட்டார்.
**
உலகப் புரட்சி, ஆயுதம் தாங்கிய புரட்சி என்றெல்லாம்
பேசிய பல புரட்சிக் குத்தகைதாரர்கள் காங்கிரஸ்
கருங்காலிச் சங்கம் INTUCயில் அடைக்கலம் தேடியபோது
கடைசி வரை போர்க்குணம் மிக்க எங்கள் NFTE (National
Federation of Telecom Employees) சங்கத்தோடு இணைந்து
உறுதியோடு போராடியவர் தோழர் ஜெயமோகன்.
**
எங்கள் சங்கம் அறைகூவல் விடுத்த அனைத்துப்
போராட்டங்களிலும் அனைத்து வேலைநிறுத்தங்களிலும்
உணர்வுபூர்வமாகப் பங்காற்றியவர் தோழர் ஜெயமோகன்.
எல்லா வேலைநிறுத்தங்களையும்  ஆதரித்துப் பிரச்சாரம்
செய்தவர் தோழர் ஜெயமோகன்.அவர் பணியாற்றிய
நாகர்கோவில் SSAயில் (Secondary Switching Area) NFTE
சங்கத்தில் மாவட்ட அளவில் பல பொறுப்புகளை
ஏற்றுச் செயல்பட்டவர்.
**
சுருங்கக் கூறின், அவர் மிகச் சிறந்த இடதுசாரித்
தொழிற்சங்கவாதி. சாதிமறுப்புத் திருமணம் செய்து
சிறப்பான இல்லறம் நடத்தி வருபவர்.
**
வெறும் காழ்ப்புணர்வை மூலதனமாக வைத்துக் கொண்டு,
தோழர் ஜெயமோகனை வசை பாடுவது நியாயமற்றது.
**
போலிக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள் எவரும் மோடி
அரசில் நிலவும் சகிப்பின்மைக்கு எதிராக தாங்கள் பெற்ற
சாகித்ய விருதுகளைத் திருப்பிக் கொடுக்க மறுத்து,
மோடியின்   அடிவருடிகளாக அம்பலப்பட்டபோது,
தமக்கு வழங்கப்பட இருந்த பத்மஸ்ரீ விருதை மறுத்தவர்
தோழர் ஜெயமோகன். அவர் என்றென்றும் எங்களின்
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தோழர்.
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக