வியாழன், 21 ஏப்ரல், 2016

மிகவும் சரி. எனவேதான் "ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில்
இதைச் செய்ய முடியும்" என்று பின்னூட்டத்தில்
குறிப்பிட்டு இருந்தேன். எடுத்தவுடன் கைக்கு வருவது
சைன் ஃபார்முலா. அதே நேரத்தில் சைன் ஃபார்முலா,
கோசைன் ஃபார்முலா இரண்டையும் இக்கணக்கில்
பயன்படுத்த விரும்பினேன். அதன் மூலம் இரண்டு
ஃபார்முலாக்களையும் இந்த ஒரே கணக்கின் மூலம்
விளக்கி விடலாம் என்று கருதினேன்.
**
மாற்று வழி (ALITER) கொடுத்தமைக்கு நன்றி. கணிதம்
படிக்கும் மாணவர்கள் இவ்வளவு முயற்சியின் பிறகு
கொடுக்கப்படும் விளக்கங்களை மனதில் பதிக்க
வேண்டும். ALITER பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.        


இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பதால்
எனக்கு எவ்விதமான பயனும் இல்லை. ஆனால்
இளைஞர்கள் மாணவர்கள் தெரிந்து கொண்டார்கள்
என்றால் அவர்களுக்கு எவ்வளவோ லாபம். நான்
படிக்கும்போது  இன்றைக்கு உள்ள எந்த வாய்ப்பும்
கிடையாது.  இன்றைக்கு உள்ள வாய்ப்புகளில் ஒரு சிறு
பகுதியாவது எங்கள் காலத்தில்  கிடைத்திருக்கும் என்றால், 
நாங்கள் நிச்சயம் மலையைப் புரட்டி இருப்போம்.பெருமூச்சு விடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக