சனி, 16 ஏப்ரல், 2016

சமச்சீர் கல்வி என்ற கோட்பாட்டையே ஜெயலலிதா
ஏற்கவில்லை. அதை ரத்து செய்தார். எந்தத் தமிழறிஞரும்
போராடவில்லை. தமிழ்ச் சமூகம் கொந்தளிக்கவில்லை.
அமைதி காத்தது. இதுதான் தமிழ்ச்சமூகம்.
**
இந்நிலையில் இங்கிலீஷ் மீடியத்தையும் கலைஞர் நீக்கி
இருப்பாரேயானால், அவரை அடித்தே கொன்று இருப்பார்கள்
மானங்கெட்ட தமிழர்கள்.
**
தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டம்
செய்தாரே கலைஞர். ஜெயா அதை நீக்கினாரே! எந்தத் தமிழறிஞர்
அதை எதிர்த்துப் போராடினார்?
**
சமச்சீர் கல்வியை ஜெயா நீக்கியபோது, இதே தமிழறிஞர்
முத்துக்குமரன் மௌன விரதம்தானே பூண்டு இருந்தார்!
**
பொறியியல் படிப்பில் தமிழ் வழிக்கல்வி கொண்டு வந்தாரே
கலைஞர், எவன் ஆதரித்தான்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக