வியாழன், 14 ஏப்ரல், 2016

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை
நான் பிறக்கும் முன்பே நிரூபிக்கப் பட்டு விட்ட ஒன்று.
நான்தான் அதை நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் எந்த
அவசியமும் இல்லை. என்றாலும் அதை நிரூபித்து ஒரு
நீண்ட கட்டுரை அல்லது தொடர் எழுத உள்ளேன். நிற்க.
**
மிகப்பெரும் புலவரான திரு.வி.க பண்டித நடையில்தான்
எழுதிக் கொண்டு இருந்தார். ஆனால் அவர் தொழிற்சங்க
இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கியதுமே, தமது
பண்டித நடையானது மக்களைச் சென்று அடையவில்லை
என்பதை உணர்ந்தார். நடையை  எளிமைப் படுத்தினார்.
வினா -விடை நடை எனப்படும் கேள்வி கேட்டுப் பதில்
சொல்லும் எளிய நடைக்கு மாறினார். அவரின் பிந்தைய
காலத்துப் பேச்சு-எழுத்துகளை அறிந்தோர் இதை எளிதில்
உணர்வர்.
**
ஒரு வாக்கியம் பத்து வரி இருக்கும்படியாக, நீண்ட
வாக்கியங்களை எழுதுவது, இங்கிலீஷ் மீடியத்தால்
சீரழிந்து போய்க் கிடக்கும் இன்றைய தலைமுறைக்கு
விளங்காது. எழுதும்போது, நாம் எழுதுவது அனைவருக்கும்
போய்ச் சேர  வேண்டும் என்ற குறிக்கோளுடன் எழுத வேண்டும்.
எல்லோரும் தொல்காப்பியத்தைக் கரைத்துக் குடித்து
இருப்பார்கள் என்ற நினைப்புடன் எழுதுவது மக்கள் விரோதத்
தன்மையே.
**
அவ்வளவு கடினமான தொல்காப்பியத்தை, இலக்கணம்
படித்தே இராத பாமரனுக்கும் புரியும்படியாக எழுதிய
கலைஞரைக் கொஞ்சமாவது பின்பற்ற வேண்டாமா?       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக