கட்டாயப் பாடம் ஆக்குங்கள்!
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
பத்தாம் வகுப்பு வரை கணிதம், அறிவியல் ஆகிய
பாடங்களை எல்லோரும் படித்தாக வேண்டும். இதுதான்
இன்று இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள
பாடத்திட்டம்.
இது போதாது. பன்னிரண்டாம் வகுப்பு வரை
கணிதம், இயற்பியல் (Maths, Physics) ஆகிய இரண்டு
பாடங்களும் கட்டாயப் பாடம் ஆக்கப்பட வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பில் ஹிஸ்டரி க்ரூப்,
அக்கவுன்டன்சி க்ரூப் என்றெல்லாம் கணிதத்தில் இருந்து
பிய்த்துக் கொண்டு போக அனுமதிக்கக் கூடாது.
11,12 வகுப்புகளில் யார் என்ன க்ரூப் எடுத்தாலும்,
கணக்கும் இயற்பியலும் கட்டாயப் பாடங்கள்.
மொத்தமுள்ள நான்கு பாடங்களில், கணிதம் இயற்பியல்
போக மீதி இரண்டு பாடங்களை மாணவர்களின்
விருப்பத்துக்கு விட்டு விடலாம்.
உதாரணமாக, இப்படி சில க்ரூப்கள் இருக்கலாம்.
அ) கணிதம், இயற்பியல், வணிகவியல், அக்கவுன்டன்சி
ஆ) கணிதம், இயற்பியல், பொருளியல், வரலாறு.
இ) கணிதம், இயற்பியல், வரலாறு, ஆங்கில இலக்கியம்
சுருங்கக் கூறின், இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும்
11, 12 வகுப்புகளில் கணிதமும் இயற்பியலும் கட்டாயப்
பாடங்களாக பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக