இன்றைய பிற்போக்குச் சூழலில்
கலைஞரின் முற்போக்குக் கொள்கைகள்
பரவலான மக்களின் ஆதரவைப் பெறுமா?
----------ஒரு சமூகவியல் பகுப்பாய்வு-----------------
----------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------
1) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று
சட்டம் செய்தார் கலைஞர். அதைச் செயலாக்க, தம் ஆட்சிக்
காலத்தில் தம்மால் இயன்றதை எல்லாம் அந்தரங்க
சுத்தியுடன் செய்தார். கலைஞரின் இச்செயல் மகத்தான
சாதி ஒழிப்புச் செயல்பாடு. சமத்துவத்தை நோக்கிய ஓர்
ஆகப்பெரிய அடிவைப்பு.
ஒரு கட்சியின் அல்லது தலைவரின் வாழ்வையும்
எதிர்காலத்தையும் தேர்தல் அரசியலும் வாக்குவங்கி
அரசியலும் தீர்மானிக்கும் தற்காலச் சூழலில், தேர்தல்
அரசியல் ரீதியாக, இச்செயலால் கலைஞரோ அல்லது
திமுகவோ அடைந்த ஆதாயம் மிகவும் அற்பமே.
ஏனெனில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்
என்ற கோரிக்கை ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின்
கோரிக்கையாக இல்லை. அதாவது மக்களின்
கோரிக்கையாக இல்லை என்பதே இதன் பொருள்,
பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருப்பதை மக்கள்
வெறுக்கவில்லை; ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதே
இதன் பொருள்.
என் சாதிக்காரன் அர்ச்சகராக வேண்டும் என்று ஒரு
வன்னியரோ, நாடாரோ, தேவரோ கோரவில்லை என்பதே
இதன் பொருள்.
ஒரு கோரிக்கை மக்களின் கோரிக்கையாகத் திரண்டு
வடிவம் எடுக்கும் முன்னரே கலைஞர் அதைச் செயலாக்க
முனைந்தார். இது முற்றிலும் அவரின் அகநிலை விருப்பத்தின்
எதிரொலியே தவிர சமூகத்தின் புறநிலை யதார்த்தத்தின்
பிரதிபலிப்பு அல்ல.
ஒரு கோரிக்கைக்குச் சமூகம் பக்குவப்படும் முன்பே,
கலைஞர் அதைச் செயலாக்க முனைந்தார். எனவே
பக்குவப்படாத சமூகம் இக்கோரிக்கை நிறைவேற்றத்தில்
அவருக்குப் பின் அணிதிரளவில்லை. சுருங்கக் கூறின்
பூக்கும் முன்பே பெண்ணை மஞ்சத்துக்கு அனுப்பியது
போன்றது இது.
2) பெண்ணுக்குச் சொத்தில் சமஉரிமை!
---------------------------------------------------------------
தமது முந்தைய ஆட்சியில், பல ஆண்டுகளுக்கு
முன்பே, பெண்ணுக்குச் சொத்தில் சமஉரிமையை
வழங்கிச் சட்டம் பிறப்பித்தார். வன்முறையான ஒரு
புரட்சியை நடத்தி பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக்
கைப்பற்றிய சோவியத் ஒன்றியத்தில் (இன்றைய ரஷ்யா)
லெனின், ஸ்டாலின் போன்ற மார்க்சிய மூல ஆசான்கள்
செய்ததை கலைஞர் தமிழ்நாட்டில் செய்தது கலைஞரை
ஒரு மார்க்சியவாதியாகக் காட்டலாம். அனால் தேர்தல்
அரசியல் ரீதியாக, வாக்கு வங்கி அரசியல் ரீதியாக
கலைஞருக்கோ திமுகவுக்கோ இச்சட்டத்தால் எவ்வித
ஆதாயமும் இல்லை.
பக்குவப்படாத ஒரு அரை நிலப்பிரபுத்துவ, சாதியச்
சமூகத்தில் பெண்ணுக்குச் சொத்தில் சமஉரிமை
என்பது HIGHLY PREMATURE என்றுதான் சமூகவியல்
ஆய்வாளர்களால் பார்க்கப் படும்.
பெண்ணுக்குச் சொத்தில் சமஉரிமை வேண்டும் என்று
தமிழ்ச் சமூகம் கோரவில்லை; போராடவில்லை. இன்னும்
சொல்லப்போனால், தமிழ்ச் சமூகத்தின் கோரிக்கையாகவே
அது இல்லை. எனினும் கலைஞர் புற நிலையைப்
பரிசீலிக்காமலேயே, எவ்விதமான புறநிலை நிர்ப்பந்தமும்
இல்லாத நிலையில், தமது சொந்த அகநிலை விருப்பத்தால்
உந்தப்பட்டு பெண்ணுக்குச் சொத்தில் சம உரிமை
வழங்கினார். இது முற்றிலும் அகநிலைவாதம்
(pure subjectivism).
எனவே மேற்கூறிய மகத்தான புரட்சிகரச் செயல்பாடுகளைத்
துணிந்து மேற்கொண்டும் அவற்றுக்கு இணையான
வாக்கு வங்கி ஆதாயத்தைக் கலைஞர் பெறவில்லை,
பெற முடியவில்லை. இதற்கான காரணம் முன்சொன்னதே.
---------------------தொடரும் ---------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக