ஒல்லும் வாயெல்லாம் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்
என்ற ஒரு குறளை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.
வள்ளுவர் கூறிய வண்ணம், கிடைக்கிற ஒவ்வொரு
வாய்ப்பையும் பயன்படுத்தி நியூட்டன் அறிவியல்
மன்றம் அறிவியலைப் பரப்பி வருகிறது.
**
இது ஒரு அரசியல் பதிவு. அதே நேரத்தில் அறிவியல்
பதிவும் கூட. ஒரு அரசியல் பதிவையே அறிவியல்
பதிவாக மாற்றுகின்ற ரசவாத வித்தை எமக்கு மட்டுமே
கைவந்த கலை.
**
ஜெர்மானிய இயற்பியலாளர் வெர்னர் ஹெய்சன்பெர்க்
பற்றி இப்பதிவு பேசுகிறது. Group theory, Games theory,
Matrix theory ஆகிய நவீன கணிதவியல் கோட்பாடுகளை
போகிற போக்கில் இப்பதிவில் சொல்லுகிறோம்.
தேர்தல் காய்ச்சல் அதிகரித்துக் கொண்டே செல்லும்
இந்தத் தருணத்திலும் அறிவியலை முன்னே கொண்டு
செல்கிறோம். இது எம்மால் மட்டுமே இயலும்.
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
**
படித்தல், சிந்தித்தல், விவாதித்தல் ஆகிய படிநிலைகளின்
வாயிலாகத்தான் மனித குலம் அறிவைப் பெருக்கிக்
கொண்டது. இது அறிவியல் வளர்ச்சி அடைவதற்கு
முன்பு இருந்த நிலை. அறிவியலின் வளர்ச்சிக்குப்
பின்னர் "செய்து பார்த்தல்"என்ற புதிய படிநிலை
உருவானது. அறிவியல் கட்டுரைகள் வெறுமனே படித்து
முடித்ததும் விலகி விடும் தன்மை கொண்டவை அல்ல.
அவை செய்து பார்த்தலைக் கோருகின்றன.
**
41 to the power of 41 என்றால் என்ன என்பதைச் செய்து
பார்த்தால் மட்டுமே உணர முடியும். அதில் என்ன கஷ்டம்?
கணிதம் பயில்வது எங்ஙனம் கழுதையைச் சிரைப்பது
ஆகும்? இன்றைய மனிதன் வாழுகிற வாழ்க்கை உச்சந்
தலையில் இருந்து உள்ளங்கால் வரை கணிதமும்
அறிவியலும் போட்ட பிச்சை அல்லவா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக