திங்கள், 11 ஏப்ரல், 2016

அழகிய பெண்ணின் வயது என்ன? விடையும் விளக்கமும்!
-----------------------------------------------------------------------------------------------
"எனக்குக் கணக்கு வராது", 
"அல்ஜிப்ரா ரொம்பக் கஷ்டம்" 
ஆகிய கூற்றுகளைப் பொய்ப்பிப்பது
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பணிகளில் ஒன்று.
எனவே எளிமையான ஒரு தீர்வை இங்கு முன்வைக்கிறோம்.  
**
பிறந்த ஆண்டு,,,,,, அதன் இலக்கங்களின் கூட்டுத்தொகை......
நடப்பாண்டான 2016இல் வயது என்ற வரிசையில் 
அமைந்த அட்டவணை இது.
2016...9...0
2015...8...1
2014...7...2
2013...6...3
2012...5...4
---------------
2011...4...5
2010...3...6
2009...11...7
2008...10...8
2007...9...9
2006...8...10
------------------
2005...7...11
2004...6...12
2003...5...13
2002...4...14
2001...3...15
2000...2...16
------------------
இனி அட்டவனையை பிறந்த ஆண்டு 1999 என்று 
எடுத்துக் கொண்டு அமைப்போம்.......
(தொடரும்..அடுத்த கமென்ட்டில்)
------------------------------------------------------------------------------------------
அட்டவணை (தொடர்ச்சி)
-------------------------------------------
1999...28...17
1998...27...18
1997...26...19
1996...25...20
1995...24...21
------------------
1994...23...22
1993...22...23
1992...21...24
1991...20...25
1990...19...26
1989...27...27---------இதுதான் விடை.
1988...26...28
----------------------
இதற்கு மேல் அட்டவணையை நீட்டிக் கொண்டு போகத் 
தேவையில்லை. விடை வந்து விட்டது என்பதால் 
அல்ல. இலக்கங்களின் அதிகபட்சக் கூட்டுத் தொகை 
28 க்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. (1999இல் உள்ள 
sum of the digits 28). 1988ஆம் ஆண்டுடன் 28 வயதும் வந்து 
விட்டது. இனி ஆண்டு 1987,1986 என்று குறையக் குறைய
வயது 29, 30 என்று ஏறிக்கொண்டே போகும்.எனவே 
மேற்கொண்டு அட்டவணை தேவையில்லை.
This problem has an UNIQUE solution. This is also proved. 
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக