புதன், 27 ஏப்ரல், 2016

அது உத்தரவா, பரிந்துரையா? பொதுவாக, தங்களின்
தீர்ப்புகளில் நீதியரசர்கள் பல்வேறு கருத்துக்களைச்
சொல்வார்கள். இவை observations எனப்படும். நீதியரசர்களின்
இந்த observations கட்டுப்படுத்தும் தன்மை உடையவை அல்ல
(not binding). கருத்துக் கூறுவது வேறு. உத்தரவு
பிறப்பிப்பது வேறு.
**
பத்திரிகைச் செய்திகளின்படி,
மதுரை நீதிபதி அவர்கள் அரசுக்கு உத்தரவு
பிறப்பித்து உள்ளார் என்று தெரிய வருகிறது.
இது அத்துமீறல் ஆகும். இப்படி உத்தரவு
பிறப்பிக்க நீதிபதிக்கு உரிமை இல்லை.
திருக்குறளுக்கு மட்டுமல்ல, பகவத் கீதைக்கும்
இது பொருந்தும்.

இந்த ஒற்றை நிகழ்வை வைத்துக் கொண்டு
உருவானது அல்ல நீதிபதிகள் பற்றிய கருத்து.
பல ஆண்டுகளுக்கு முன்பே,  இந்திய நீதித்துறை
ஆற்றல் குறைந்த IQ குறைந்த (substandard talents)
நபர்களால் ஆனது என்பது புலப்பட்டது. பல
ஆண்டுகளாகவே இக்கருத்தைச் சொல்லி வருகிறேன்.
**
கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்ற
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் கொள்வோம்.
இவ்வாறு தீர்ப்புச் சொல்ல இந்த நீதிபதிகளுக்கு
என்ன அருகதை உள்ளது? உச்சநீதிமன்ற நீதிபதி
என்றால் அறிவியல் மேதை ஆகி விடுவாரா?
அணு உலை பாதுகாப்பற்றது என்று தீர்ப்பு
வழங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அதைச் சொல்லுவதற்கும் அவர்களுக்கு அருகதை
கிடையாது.
**
சமூகத்தின் அறிவியலில் இருந்து முற்றிலுமாகத்
தங்களைத் துண்டித்துக் கொண்டு நிற்கும்
நீதியரசர்களைக் கொண்ட நீதித்துறை மாற்றி
அமைக்கப்பட வேண்டும்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக