வியாழன், 28 ஏப்ரல், 2016

நுழைவுத் தேர்வு மூலமே
சமூகநீதியைக் காக்க முடியும்!
இதுதான் உண்மை!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார்
கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கு
நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை
நடைபெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்
தீர்ப்பை கோட்பாட்டு அடிப்படையில் (in principle)
நியூட்டன் அறிவியல் மன்றம் வரவேற்கிறது.

என்றாலும் இத்தீர்ப்பை நடைமுறைப் படுத்தும்போது
இத்தீர்ப்பால் எழுந்துள்ள நடைமுறைச்
சிக்கல்களுக்குத்தீர்வு காண வேண்டும்.

உண்மையில் நுழைவுத் தேர்வு என்பது ஒரு
சோஷலிசக் கோட்பாடு. அது சமூக நீதியைப்
பாதுகாக்கும் ஒரு கோட்பாடு.

இந்திய சமூகமும் சரி, தமிழ்ச் சமூகமும் சரி
பல்வேறு மூட நம்பிக்கைகளின் பிடியில்
சிக்கி இருக்கின்றன.  நுழைவுத் தேர்வை ரத்து
செய்வது  சமூக நீதியைக் காக்கும் என்பது
அப்படிப்பட்ட ஒரு மூட நம்பிக்கையே.

கிராமப்புற மாணவர்களுக்குப் பாதிப்பு, SC,ST,BC
மாணவர்களுக்குப் பாதிப்பு என்பதெல்லாம்
உண்மையான கள நிலவரத்தை அறியாமல்
கிளிப்பிள்ளைத் தனமாகக் கூறப்படுபவை ஆகும்.

அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து
மத்திய அரசு சில உறுதியான நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும். அப்போதுதான் இத்தீர்ப்பின்
பலனைப் பெற முடியும்.

1) அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகள்,
நிகர்நிலைப் பல்கலைகள்,சிறப்பு அந்தஸ்து
பெற்றுள்ள ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட அனைத்து
மருத்துவ இடங்களும் இந்தப் பொது நுழைவுத்
தேர்வுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

2) நுழைவுத் தேர்வு என்பது 3 மணி நேரம் கொண்ட
ஒரே ஒரு தேர்வாக இருக்க வேண்டும். தேர்வு
அறையில் நடைபெறும் தேர்வாக இருத்தல்
வேண்டும். ஆன்லைன் தேர்வு கூடாது. DESCRIPTIVE
type கூடாது. Objective typeஆக இருத்தல் வேண்டும்.

3) மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தில்
படித்தார்களோ, அந்தப் பாடத் திட்டத்தின்
அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் அமைய
வேண்டும்.

4) காலப்போக்கில், எல்லா மாநிலங்களிலும்
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
அறிவியல் பாடங்களில் CBSE பாடத்திட்டம்
கொண்டு வரப்பட வேண்டும். மொழிப்பாடங்கள்,
வரலாறு, பூகோளம் ஆகியவை அந்தந்த மாநிலத்தின்
தன்மைக்கு ஏற்ப, மாநில அரசு தீர்மானித்தபடி
இருக்கலாம். ஆனால் Maths, Physics,Chemistry, Biology
ஆகிய பிரதான பாடங்கள் (core subjects) CBSE பாடத்
திட்டத்தில் உள்ள பாடங்களாகவே இருக்க வேண்டும்.

5) வரலாறும் பூகோளமும் மாநிலத்துக்கு மாநிலம்
நாட்டுக்கு நாடு  மாறும். ஆனால் Maths, Physics மாறாது.
sin xஐ differentiate பண்ணினால் ஜார்க்கண்டிலும்
cos x தான்; சத்திரப்பட்டியிலும் cos x தான்.

6) பொது நுழைவுத் தேர்வால் அந்தந்த மாநிலத்தில்
உள்ள இடஒதுக்கீட்டின் அளவுக்குத் துளியும் பாதிப்பு
இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.

7) மேற்கூறிய அனைத்தும் நடைமுறை சாத்தியம்
உடையவைதான்.

********************************************************************
இந்திய அரசின் ரயில்களை நம்பிப் பயணம் செய்கிறோம்;
விமானங்களை நம்பிப் பயணம் செய்கிறோம். இந்திய
அரசின் அஞ்சல் துறையை நம்பித்தான் ஆவணங்களை
அஞ்சலில் அனுப்புகிறோம்; தொலைபேசியில் பேசுகிறோம்.
அது போலத்தான் இதுவும்.
**
இங்கு பேசப்படும் விஷயம் கல்வித்துறை சார்ந்தது.
துறை சார்ந்த அறிவை, புலமையைக் கோருகிறது.
மாணவர்களின் கஷ்ட நஷ்டங்களைப் பற்றிய புரிதலுடனும்
பெற்றோர்களின் அலைக்கழிப்பு துயரங்களைப்
பற்றிய புரிதலுடனும் இந்த விஷயத்தைப்
பார்க்க வேண்டும்.
**
நியூட்டன் அறிவியல் மன்றம் இக்கட்டுரையில்
கூறியவை அனைத்தும் வெறும் கருத்துகள் அல்ல.
இவை அனைத்தும் தேற்றங்கள் (theorems) ஆகும்.
ஏனெனில் கூறியவை அனைத்தும் நிரூபிக்கப் பட்டவை.
In maths, statements with proof are called theorems.


மாணவர்கள் தங்கள் விருப்பத்தை (விரும்பும் கல்லூரியை)
தெரிவிக்க வேண்டும். அதன்படி counsellingஇல் இடம்
ஒதுக்கப்படும்.

மாநில அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த நுழைவுத்
தேர்வை (TNPCEE) 2007இல் கலைஞர் ரத்து செய்தார்.
இன்று வரை எந்தக் கட்சியாவது நுழைவுத் தேர்வை
மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்லி
இருக்கிறதா?  எந்தக் கட்சியின் தேர்தல்
அறிக்கையிலாவது இப்படி உள்ளதா? எனவே மாநில
அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப் படுவதற்கு
தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மத்திய அரசு
தலியிட்டால்தான் முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக