திங்கள், 25 ஏப்ரல், 2016

கோடி என்பது தனித்தமிழ்ச்சொல் இல்லை என்பது
முற்றிலும் தவறு. "முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
பெருந்தவமும்" என்கிறான் கம்பன். மொழி என்பது எவருக்கும் தனியுடைமை இல்லை. கோடிக்கணக்கான
தமிழர்களின் பொதுவுடைமை. தனக்கு மட்டுமே
தனியுடைமையான பொருளை ஒருவன் என்ன
வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால்
மொழியை, தமிழை அவ்வாறு அறுத்து எறியவோ
பிய்த்துப் போடவோ எவர்க்கும் உரிமை இல்லை.
கோடி என்ற சொல் (பெருவழக்குடைய தமிழின் எண்ணுப்பெயர்களில் ஒன்று) நூற்றாண்டுகளாக
தமிழில் பெருவழக்கு உடைய சொல். அதைத்
தமிழ்ச்சொல் இல்லை என்று அறுத்து எறிய
எவர்க்கும் உரிமை இல்லை. தமிழ்ப்பகைவர்
மேற்கொள்ளும் செயல் இது.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக