வியாழன், 28 ஏப்ரல், 2016

இந்த நுழைவுத் தேர்வு இல்லாவிட்டால், மருத்துவக்
கல்வி நூறு சதமும் வணிகமாகி விடும். ஒரு கோடி ரூபாய்
கேப்பிடேஷன் கட்டணம் செலுத்தி, மருத்துவக் கல்லூரியில்
தனது மக்குப் பிள்ளைகளைச் சேர்த்த பல தகப்பன்களை
நான் நேரடியாக அறிவேன். தனியார்  முதலாளிகளிடம்
கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, பணிஓய்வு
பெறுகிற நாளில் காரியத்தை முடித்துக் கொடுத்த
சான்றோர்களை இந்த நாடு அறியும்.
**
நுழைவுத் தேர்வு எழுதுகிற மாணவ மாணவிகளின்
கருத்தைக் கேளுங்கள். துறைசார்ந்த விஷயங்களில்
நல்ல பரிச்சயம் உள்ளவர்களின் கருத்தைக் கேளுங்கள்.
பொத்தாம் பொதுவாக மாநில உரிமை என்று பேசுவதில்
பயனில்லை.


கட்டுரை மிகத் தெளிவாக, தேங்காயை உடைத்தது
போல விஷயத்தைக் கூறுகிறது. அதை அருள்கூர்ந்து
நன்கு படிக்குமாறு வேண்டுகிறேன்.


அறிவியல் சார்ந்த ஒரு விஷயத்தை அறிவியல் சாராமல்
பார்ப்பதால் பல தோற்றப் பிழைகள் ஏற்படுவது
இயற்கையே. தமிழ்நாடு எக்ஸ்பிரசில் டெல்லிக்குப்
போக வேண்டும். இருக்கை, படுக்கை வசதிகளை
முன்பதிவு செய்து கொள்கிறோம். அந்த முன்பதிவு
வெளிப்படையாக, நேர்மையாக, ஊழல் இல்லாமல்
இருக்க வேண்டும். இது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு.
**
அது போலவே, மருத்துவக் கல்லூரி இடங்களை
நிரப்பும்போது, ஊழல் இல்லாமல் வெளிப்படைத்
தன்மையுடன், நேர்மையாக நிரப்ப வேண்டும்.
அதற்குத்தான் இந்த நுழைவுத் தேர்வு.
**
அறிவியலும் கணிதமும் பிரபஞ்சத் தன்மை
உடையவை (universal). அவை மாநிலத்துக்கு
மாநிலம் மாறுபடுவதில்லை. எனவே மாநில
உரிமை பறிப்பு என்ற கற்பனைக்கு இடமில்லை.
நியூட்டனின் இயக்க விதிகள் (laws of motion)
மாநிலத்துக்கு மாநிலம் மாறுவதில்லை.


நான் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும்
மேலாக CBSE, TN state board அமைப்புகளின் 10,11,12
வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம்
பாடங்களுடன் நெருங்கிய பரிச்சயம் உடையவன்.
மருத்துவக் கல்லூரி சேர்க்கை, பொறியியல் சேர்க்கை ஆகியவற்றை கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும்
மேலாக தொடர்ந்து கவனித்து வருபவன். பல்வேறு
போட்டித் தேர்வுகள் குறித்து தகவல் திரட்டி,
அவற்றின் குறை நிறைகளை அறிந்தவன்.
**
எனக்குத் தெரியாத விஷயத்தில் நான் கருத்துச்
சொல்வதில். நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்
நாம் அடைந்த  நன்மை பூஜ்யமே. ஏற்பட்ட
நஷ்டம் ஏராளம்.



பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற
உத்தரவு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு
வரப்பட்டது. அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தது
தனியார் சுயநிதிக் கல்லூரிக் கொள்ளையர்களே.
தங்களின் பிழைப்பில் மன்மோகன்சிங் மண்ணள்ளிப்
போட்டு விட்டாரே என்ற ஆத்திரத்தில், சுயநிதி
முதலைகள் என்னவெல்லாம் செய்தன, தமக்குச்
சாதகமான தீர்ப்பைப்பெற என்னவெல்லாம் செய்தன
என்பது மக்களுக்குத் தெரியாது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக