வியாழன், 14 ஏப்ரல், 2016

சித்திரை முதல் நாள் புத்தாண்டுஅல்ல!
தை முதல் நாளே புத்தாண்டு!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
புத்தாண்டுப் பிறப்பு என்பது ஒரு வானியல் நிகழ்வு.
இது மனித முயற்சியால் ஏற்படுவது அல்ல. பூமி
சூரியனை ஒரு சுற்றுச் சுற்றி முடிக்கும்போது,
ஓர் ஆண்டு முடிகிறது.

சூரியனில் இருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில்
பூமி இருக்கிறது. பூமியானது நொடிக்கு 30 கி.மீ வேகத்தில்,
அதாவது மணிக்கு ஒரு லட்சம் கி.மீ வேகத்தில் (தோராயமாக)
சூரியனைச் சுற்றி வருகிறது. இவ்வாறு சுற்றி வருகையில்,
ஒரு சுற்றுச் சுற்றி முடிக்கும்போது, பூமியானது 94 கோடி
கி.மீ தூரத்தைக் கடக்கிறது. இதற்கு 365.25 நாட்கள்
ஆகின்றன.இதுதான் ஓர் ஆண்டு ஆகும்.

சூரியனின் சுழற்சி அடிப்படையில் புத்தாண்டு என்பது
தை முதல் நாளே. ஆங்கில மரபிலும் ஜனவரி முதல் நாளே.

எனவே எவ்விதத்திலும் சித்திரை முதல் நாளைப்
புத்தாண்டாகக் கருதுவது அறிவுடைமை ஆகாது.
-----------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக