சனி, 23 ஏப்ரல், 2016

பெரிதும் துப்பறியும் நாவல்களையும், அறிவியல்
நூல்களையும் ( SCIENCE FICTION) உட்பட எழுதியவர்
சுஜாதா. அவரின் படைப்புகளைத் திறனாய்வு
செய்கையில் பயன்படுத்த வேண்டிய அளவுகோல்
முற்றிலும் வேறு. ஜெயகாந்தன், நா.பா, ஜெயமோகன்
ஆகியோருக்குப் பொருத்தமான அளவுகோலால்
சுஜாதாவை அளக்க இயலாது.
**
வெகுமக்களிடம் பெருமளவு அறிவியலைக் கொண்டு
சேர்த்தவர் சுஜாதா.  ஹோலோகிராம் என்பது இன்று
ஒரு சிலருக்கேனும் தெரியும். ஆனால் இந்த
ஹோலோகிராமை மையமாகக் கொண்டு சுஜாதா
கொலையுதிர்காலம் என்ற நாவலை எழுதினர்.
வெகுஜன  ஏடு ஒன்றில் இது தொடராக வந்தது.
இதுபோன்ற நாவல்கள் காலத்தை வென்று நிற்க
முடியாதவை.அப்படித் தேவை எதுவும்
அவற்றுக்குக் கிடையாது. இந்த நாவலைப் படிப்பதால்   ஹோலோக்ரம் பற்றிய அறிவியல் நூலைப் படித்த
பயன் கிடைக்கும்.
**
இந்தியாவும் சரி, தமிழ்நாடும் சரி, scientifically illiterate
countries. இங்கு சுஜாதா இகழத்தான் படுவார்.
ஏனெனில் கழுதைகள் கரும்பின் ருசியை அறிவதில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக