புதன், 20 ஏப்ரல், 2016

உண்மையான கம்யூனிஸ்ட், முன்மாதிரி கம்யூனிஸ்ட் 
தளி ராமச்சந்திரனுக்கு காரல் மார்க்ஸ் விருது!
-----------------------------------------------------------------------------
தருமபுரி மாவட்டம் தளி தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர்
தளி ராமச்சந்திரன் கம்யூனிசத்திற்கு ஆற்றியுள்ள
அரும் பெரும் சேவைகளைப் பாராட்டி, அவருக்கு
காரல் மார்க்ஸ் விருதை கம்யூனிஸ்ட் கட்சி வழங்குகிறது.

விருது வழங்கும் விழா தர்மபுரியில் நடக்கும் என்றார்
தா பாண்டியன். சுதாகர் ரெட்டி விருதை வழங்குகிறாராம்..

இவ்விழாவின் மகத்துவம் என்னவெனில், இதில்
அண்ணல் அம்பேத்கார் கலந்து கொள்கிறார் என்கின்றனர்
சிறுத்தைகள். இதில் ஆச்சரியம் ஏன்? கேப்டன் விஜயகாந்த்
அவர்கள்தானே நடமாடும் அம்பேத்கார்! விஜயகாந்த் வடிவில்
அம்பேத்கரைக் காண்கிறேன் என்றாரே திருமாவளவன்!

மேலும் அன்னை தெரசா, வைகோ, சீத்தாராம் எச்சூரி
உள்ளிட்ட பெருந்தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கும்
இந்த விழா கம்யூனிச வளர்ச்சியில் ஒரு மைல் கல்
என்கிறார்கள் காம்ரேடுகள்.

இன்குலாப்  ஜிந்தாபாத்!
காரல் மார்க்ஸ் ஜிந்தாபாத்!
அம்பேத்கார் விஜயகாந்த் ஜிந்தாபாத்!!!
----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக