புதன், 13 ஏப்ரல், 2016

ஐ.ஐ.டி படிப்புக் கட்டணம் பல மடங்கு உயர்வு!
எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் 
ஐ.ஐ.டி கட்டணக் குறைப்பு பற்றி சொல்லப்படவில்லை!
ஸ்மிருதி இரானி  கொடும்பாவி எரிப்பு!
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------------------------------------
இதுவரை ஐ.ஐ.டி கட்டணம் ரூ 90,000 ஆக இருந்தது.
இந்த ஆண்டில் இருந்து (ஜூலை 2016 முதல்) ரூபாய் 
இரண்டு லட்சமாக இக்கட்டணம் உயர்கிறது. இது 
பெருத்த அநியாயம்; கொடுமை.

என்றாலும் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும் 
இக்கட்டண  உயர்வை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை.
கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இது பற்றி எதுவும் 
சொல்லப் படவில்லை.

படிப்பது பாவம்; அதிலும் அறிவியலைப் படிப்பது பெரும் 
பாவம் என்ற கருத்தியல் விதிவிலக்கின்றி தமிழக 
அரசியல் தலைவர்களின் மூளையைக் கவ்விப் 
பிடித்து இருக்கிறது என்பது புலப்படுகிறது.

ஐ.ஐ.டி.யில் முத்தப் போராட்டம் நடத்திய போலிகள் ,
ஆஷாடபூதிகள் எங்கே போனார்கள்? 

ஜவஹர்லால் பல்கலை எனப்படும் JNUவில் பல்கலை 
வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே பாலுறவு 
அனுமதிக்கப் படுகிறது: ஊக்குவிக்கப் படுகிறது. 
ஆனால் ஐ.ஐ.டி  வளாகத்தில் மாணவர்களுக்கு
இடையிலான பாலுறவு அனுமதிக்கப் படுவதில்லை.
கடுமையான காவலும் கட்டுப்பாடும் பேணப்படுகிறது.

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் என்ற அமைப்பு 
இக்கட்டண  உயர்வு குறித்து எதிர்ப்புத் தெரிவித்து உள்ளதா?
இல்லை! வலது இடது 'கம்யூனிஸ்ட்' கட்சிகளின் மாணவர் 
சங்கங்கள் AISF, SFI என்ன செய்கின்றன? விஜயகாந்தை 
முதல்வர் ஆக்குங்கள் என்று பிரச்சாரம் செய்து 
கொண்டிருக்கின்றன!!!

கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன், விடுதலை ராசேந்திரன் 
இன்ன பிற போலிப் பெரியாரிஸ்டுகள் என்ன செய்கிறார்கள்?
JNU மாணவர்களிடம் விற்பதற்காக PORNOGRAPHY 
புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டிருக்கிறார்களா?

இக்கட்டண உயர்வை நியூட்டன் அறிவியல் மன்றம் 
வன்மையாகக் கண்டிக்கிறது. இதை எதிர்த்துப் போராடி 
முறியடிக்கும்/

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் 
ஸ்மிருதி இராணியின் கொடும்பாவியைக் கொளுத்தும் 
போராட்டத்தை நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்த 
இருக்கிறது.

இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்திய பிறகு, போலிப் 
பெரியாரிய மற்றும் போலி முற்போக்கு அமைப்புகள் 
தாங்களாகவே முன்வந்து தங்கள் அமைப்புகளைக் 
கலைத்து விட வேண்டும். அதுதானே நியாயம்?
---------------------------------------------------------------------------------------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக