வெள்ளி, 22 ஏப்ரல், 2016

பின்தொடரும் நிழலின் குரல்கள்!
லெனினும் ஜெயமோகனும் நிகழ்தகவுக் கோட்பாடும்!
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 22. பேராசான் லெனின் பிறந்த நாள்.
எழுத்தாளர் ஜெயமோகனின் பிறந்த நாளும் இதுவே.

பொருந்தாத விஷயங்களை வைத்துச் சிலேடை பாடிய
காளமேகப் புலவர் இன்று  இல்லை. பாம்புக்கும் எள்ளுக்கும்
உள்ள பொருத்தங்களைப் பட்டியல் இட்டு காளமேகம்
பாடிய சிலேடை எவருக்கேனும் ஞாபகம் வரலாம்.

லெனின் பிறந்த நாளில் இந்த ஜெயமோகன் ஏன் பிறந்தார்
என்ற  பொருட்செறிவு மிகுந்த கருத்துக்களைக் காண
நேர்கிறது. லெனினும் ஜெயமோகனும் ஒரே நாளில்
பிறந்தது குறித்து அறிவியல் என்ன கூறுகிறது என்பதைப்
பார்ப்போம்.

ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒருவர் பிறப்பதற்கான நிகழ்தகவு
(வாய்ப்பு) 1/365 ஆகும். (அதாவது 0.0027). அதாவது, ஓராண்டில்
10000 பேர் பிறந்தால், அவர்களில் 27 பேர் மட்டுமே ஒரு
குறிப்பிட்ட நாளில் பிறப்பார்கள்.

இன்றைய தேதியில் உலக மக்கள் தொகை 741 கோடி. இந்த
741 கோடிப்பேரும் 365   நாட்களில் ஏதேனும் ஒரு நாளில்தான்
பிறந்திருக்க முடியும். அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில்
2,03,01,370  (இரண்டு கோடியே மூன்று லட்சம்) பேர் பிறந்துள்ளனர்.

எனவே, ஏப்ரல் 22 அன்று இரண்டு கோடிப்பேர் பிறந்துள்ளனர்.
இதற்கு ஜெயமோகன் என்ன செய்ய முடியும்?

பின்குறிப்பு: இது அறிவியல் பதிவு மட்டுமே.
*****************************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக