வியாழன், 21 ஏப்ரல், 2016

நான் XI படிக்கும்போது,
அல்ஜிப்ரா-ஜியோமெட்ரியை ELECTIVE பாடமாக
எடுத்திருந்தேன். அப்போது 6 பாடங்கள்(SUBJCTS).
இப்போது உள்ளது போல் 5 பாடங்கள் அல்ல.
திரிகோணமிதி நடத்திய போது நான் பள்ளிக்குச்
செல்லவில்லை. ஊருக்குப் போனதால் லீவு.
**
லீவு முடிந்து வந்ததும் தலையும் புரியவில்லை.
வாலும் புரியவில்லை. எனவே வேறு ஊரில்
இருந்த கணித ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று
காலை முதல் மாலை வரை அவரிடம் கற்றுக்
கொண்டேன். அன்றையக் காலத்தில் அதைத் தவிர
வேறு வழியில்லை. இன்றைக்கு ஆயிரம் வாய்ப்புகள்.
காலத்தால் முந்திப் பிறந்ததால் அடைந்த நஷ்டம் இது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக