புதன், 20 ஏப்ரல், 2016

ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் பெற்ற
வசந்தி தேவியை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம்
பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்
சாமர்த்தியம் காட்டிய மக்கள் நலக் கூட்டணி!
-------------------------------------------------------------------------------
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக
ஜெயலலிதாவால் நியமிக்கப் பட்டவர் டாக்டர்
வசந்தி தேவி. 2002 மார்ச்சில் வசந்திதேவியை TNSCW
(Tamilnadu State Commission for Women) தலைவராக நியமித்தார்
அன்றைய முதல்வர் ஜெயலலிதா.

அதற்கு முன்பு பத்மினி ஜேசுதுரை மகளிர் ஆணையத்
தலைவராக இருந்தார். மூன்றாண்டுப் பதவிக்காலம்
நிறைவுற்ற நிலையில் தமக்குப் பதவி நீட்டிப்புக்
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார் பத்மினி
ஜேசுதுரை. ஆனால் அவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்
நியமிக்கப் பட்டவர் என்பதால் ஜெயலலிதா அவருக்கு
பதவி நீட்டிப்புத் தர விரும்பவில்லை.

தமக்கு விசுவாசமாக இருக்கும் ஒருவரை அப்பதவியில்
நியமிக்க விரும்பிய ஜெயலலிதாவுக்கு டாக்டர் வசந்தி தேவி
கிடைத்தார். எனவே ஜெயா அவரை நியமித்தார்.

துணைவேந்தர், மகளிர் ஆணையத் தலைவர் ஆகிய
பதவிகளில் இருந்தபோதும் சரி, வேறு பல சந்தர்ப்பங்களிலும் சரி, எப்போதுமே அரசுக்கு அனுசரணையாக இருப்பவர்
என்று பெயர் எடுத்தவர் வசந்தி தேவி.

இவரைத்தான் இன்று ஜெயாவுக்கு எதிராக நிறுத்தியதன்
மூலம், பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் சாமர்த்தியமாகக்
காய் நகர்த்தி இருக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியினர்.
தாங்கள் நிறுத்துகிற வேட்பாளர் எந்த விதத்திலும் ஜெயாவுக்கு 
ஆத்திரமூட்டி விடக்கூடாது என்ற கரிசனத்துடனும்,
ஒப்புக்குத்தான் ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறோம்
என்று ஜெயா உணரும் விதத்திலும் வசந்திதேவியை
நிறுத்தி நிம்மதிப் பெருமூச்சு விடுகிறனர்
மந கூட்டணியினர்.

சாத்வீக சிகரமான இந்த வேட்பாளரைத்தான் ஏதோ
ஜோன் ஆஃப் ஆர்க் வந்துவிட்டதைப் போல, கூச்சல்
போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் குட்டி முதலாளித்துவ
சிந்தனைக் குள்ளர்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக